அன்பு குழந்தையே !
எல்லாம் நான் பார்த்துக்கொள்வேன், எல்லாச்சுமைகளையும் என்னிடம் தந்து விட்டு தைரியமாக போய்க்கொண்டேயிரு! வருத்தத்தை விட்டு பொறுமையாக, உனக்கான இலக்கை நோக்கி போய் கொண்டே
இரு!
உனக்குத் துணையாக நான் என்றும் எங்கும் இருப்பேன். நீ நடக்கும் பாதையில் முட்கள்
இருந்தால், நானே முன் சென்று, முன்பாகவே களைந்துவிடுவேன் ! எதையும் பொருட்படுத்தாமல் உன் இலக்கை நோக்கி போய்கொண்டேஇரு
!
நீ போகும் பாதையில் மிக மோசமான மிருகங்கள் வரலாம். மோசமான மனிதர்கள் வரலாம். எதைக்கண்டும் அஞ்சாதே! தைரியமாக உன் இலக்கை நோக்கி போய்க்கொண்டே இரு, நான் அவர்களைத்தூக்கி வீசி பந்தாடுவேன் !
சாது மிரண்டால்
காடு கொள்ளாது என்பதை நீ அவர்களுக்குக்காட்டும் தருணம்
வந்துவிட்டது, உன் இலக்கை நோக்கி போய்க்கொண்டே இரு, வெற்றி நிச்சயம்!
இப்படிக்கு உன் அப்பா !
No comments:
Post a Comment