Thursday, August 10, 2017

அப்பா சாஹேப்



அப்பா சாஹேபின் பக்தியை  அறிந்து,  அவர் இல்லாத சமயம், பக்கிரி ஒருவரை அவரது  வீட்டிற்கு அனுப்பி, தன்னை பாபா  அனுப்பியதாகச் சொல்லி, ஒரு ரூபாய் தட்சிணை வாங்கி வரச்சொல்லி எல்லோரையும் ஆசீர்வதித்தார்.
பாபாவின் உதிப் பொட்டலம் ஒன்றைக் கொடுத்து அதை வழிபாட்டுக்காக பூஜையறையில் படத்துடன் வைக்கும்படி  சொன்னார் வந்தவர்.  அப்பா சாஹேப்  வீட்டிற்க்கு  வந்து விஷயத்தை அறிந்து, பக்கிரிதான்  பாபா என்று அறிந்து, தான் அச்சமயத்தில் வீட்டில் இல்லாமல் போனதற்கும், இருந்திருந்தால் தட்ணை  பத்துரூபாயாக கொடுத்திருப்பேன் என்றும் எண்ணி வருந்தினார். 
மேலும்    வெறும்  வயிற்றில் எங்கும் எதற்கும் அலையக்கூடாது என்று பாபா சொல்லியிருப்பதால், உணவு உண்ட பின் பக்கிரியைத் தேடி அலைந்தார். சிறிது நேரத்தில்  படத்தில் பார்த்த உருவத்துடன்  கூடிய    பக்கிரியைப் பார்த்து  அவர் கேட்கக் கேட்க  ரூபாய்  பத்து வரை அளித்தார்.  நவவித பக்தியைக் குறிக்கும் ஒன்பது காசுகளை  அப்பாசாஹேப் பெற்றார்.  நவவித பக்தியை பாராட்டி  பாபா அவருக்கு இவ்விதம் அருள்  செய்தார்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...