எந்த ஒரு நிகழ்வுக்கும் பின்னால், தன் பக்தர்களுக்காக பாபா செய்யும் எல்லாச் செயல்களையும், பக்தர்கள் அந்த நேரத்தில் அறியமாட்டார்கள்.
பக்தருடைய முன்வினைகளை ( முந்தைய கர்மாக்களை ) நன்கு அறிந்த
பாபா, அமைதியாக பக்தரிடம்
மனமாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்.
கால ஓட்டத்திலும், மேலும் பாபாவால் நிர்ணயிக்கப்பட்ட, அந்தக் குறிப்பிட்ட
நேரத்திலும், பாபாவின் ஆசிகளின் பலனை
ஒருவர் பெறவேண்டுமானால், அதற்கு மிகுந்த
நம்பிக்கையும், பொறுமையும் தேவைப்படுகிறது.
இக்காரணத்தினால்தான் சிரத்தாவுடன் கூடிய சபூரி அதாவது
நம்பிக்கையுடன் கூடிய பொறுமை என்பதை பாபா ஒரு பக்தனுக்குரிய முக்கிய தகுதிகளாகக் கூறியுள்ளார். ஒன்று,
மற்றொன்று இல்லாமல்
நிலைக்க முடியாது.
ஸ்ரீசாயிசத்சரித்திரத்தைத்தினமும்படியுங்கள். நம்பிக்கையுடன் கூடிய பொறுமையுடன் சாயியைப் பணியுங்கள். வெற்றி நமதே!
ஓம்_சாய்ராம்.
No comments:
Post a Comment