Thursday, August 3, 2017

வேண்டியவர்களுக்கு வேண்டியதை அளிக்கிறேன்!



பாபா தமது அடியவர்களின் நலனுக்காக யாது கூறியிருக்கிறார் என்பதைக் கவனியுங்கள்:
 யார் என்னை நினைக்கிறாரோ, அவரை நான் நிரந்தரமாக ஞாபகத்தில் வைக்கிறேன். எனக்கு வண்டியோ, குதிரையோ, ஆகாய விமானமோ, ரயில் வண்டியோ தேவையில்லை. என்னை யார் அன்புடன் கூவி அழைக்கிறாரோ, அவருக்கு முன் நான் தாமதமின்றி உடனே தோன்றுகிறேன்
என்னை அன்போடும், உண்மையோடும் நோக்கிக் கூப்பிடுகிற எல்லோருக்கும் நான் பக்கத்தில் இருக்கிறேன். எனக்குப் பயந்து நடப்பவர்களின் விருப்பத்தைக் கேட்டு அதன்படி செய்து, அவர்கள் கூப்பிடும்போதல்லாம் ஓடி வந்து காப்பாற்றுகிறேன்.
என் பெருமைகள் அல்ல, நான் செய்த அற்புதங்கள் பல என் பக்தர்களால் பேசப்படும். துன்பத்திலும், சோகத்திலும், பிரச்சினையிலும் விழுந்துபோகிற அனைவரையும் தூக்கிவிடுவதற்காகவே நான் இப்போது வந்திருக்கிறேன். உன் வேண்டுதல் கேட்கப்பட்டது,. "                       
"யார் அதிர்ஷ்டசாலியோ, எவருடைய பாவங்கள் ஒழிந்தனவோ, அவர்கள் எனது வழிபாட்டை எய்துகிறார்கள்.  'சாயி சாயி' என்று எப்போதும் கூறிக்கொண்டிருப்பீர்களானால் நான் உங்களை ஏழ்கடலுக்கு அப்பால் எடுத்துச் செல்வேன்.  இம்மொழிகளை நம்புங்கள்.  நீங்கள் நிச்சயம் நன்மையடைவீர்கள்.  வழிபாட்டின் கூறுகள் எட்டோ, பதினாறோ எனக்குத் தேவையில்லை.  எங்கு முழுமையான பக்தி இருக்கிறதோ அங்கு நான் அமர்கிறேன்".                   

ஸ்ரீ சாயியைப் பணிக அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...