Thursday, August 10, 2017

ஞானிகள் அனைவரும் ஒன்றே



ஹரிபாவ் கர்ணிக் பாபாவை தரிசனம் பெற்று திரும்புகையில், ஒரு ரூபாய் காணிக்கை அளித்து வெளிவரும்போது, இன்னுமொரு ரூபாய் பாபாவுக்குத் தஷிணை கொடுக்க எண்ணினார்.   ஆனால்  சாமா கூறியவாறு  அங்கிருந்து வெளியே சென்றார்
காலாராமரின் கோவிலுக்குத் தரிசனத்துக்குச் சென்றார்.  இங்கு நரசிங்க மஹராஜ் என்ற ஞானி தமது அடியவர்களை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு ஹரிபாவிடம் வந்து,  "எனது ஒரு ரூபாயைக்" கொடு என்றார்.  கர்ணிக் வியப்படைந்தார்.  மிகுந்த இஷ்டத்துடன் அந்த ஒரு ரூபாயைக் கொடுத்தார்.  சாயிபாபா எங்ஙனம் தான் கொடுக்க இஷ்டப்பட்டிருந்த ரூபாயை நாசிக்கைச் சேர்ந்த நரசிங்க மஹராஜ் வழியாக வாங்கினார் என்று எண்ணினார்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...