Tuesday, August 29, 2017

நீ சுகத்தின் மீது தான் சவாரி செய்ய போகிறாய்.



அனைவர் மீதும் கருணை கொண்ட இந்த பக்கீர், அன்புடன் உன்னையும் பாதுகாப்பான். இப்போது நீ பிரச்சனைகள், தடங்கல்கள் எனும் பெருங்கடலில் கழுத்து வரை கூட மூழ்கியிருக்கலாம், துக்கமும் வேதனையுமாகிய படுகுழியில் மிகவும் ஆழமாக அமிழ்ந்தும் போயிருக்கலாம். அதைப்பற்றி எல்லாம் ஏதும் நீ சிறிதளவும் வருத்தப்படாதே! அமைதியாயிரு! 
நம்பிக்கையோடு என் நாமத்தை இடைவிடாது சிந்திப்பவர்கள் என்றும் எதற்கும் துக்கப்படுவது இல்லை. என் மீது விசுவாசம் கொண்ட உனது துக்க நாட்களை முடித்து வைக்க, எனக்கு வெகுநேரம் ஆகாது. எனது ஆலயப் படிகளில் கால் வைத்த பிறகு, நீ சுகத்தின் மீது தான் சவாரி செய்யப் போகிறாய். எனது நாமம் உனது உள்ளத்திலும், எனது யோக சக்தியான உதி உன் நெற்றியிலும் இருக்கும் வரை எந்தக்கெடுதலும் உன்னை நெருங்க முடியாது....!    
                                                                                                                                 ஓம்ஸ்ரீசாய்ராம்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...