பாபா பக்தர் ஒருவர், மனத்தால் தனக்கு என்ன வேண்டுமென்று விருப்பப்படுகிறாரோ, அது அவரிடம் உழைப்பு
ஏதுமில்லாமலேயே வந்து சேரும். யாரை பாபா அரவணைக்கிறாரோ, அவர் தம்முடைய
வீட்டிலிருந்தாலும் சரி, ஏதோ தீவிலிருந்தாலும் சரி, சர்வ நிச்சயமாக சாயி அவரருகில் இரவும் பகலும் இருக்கிறார். பக்தர் எங்கே
சென்றாலும் எவ்விடத்தில் இருந்தாலும், சாயி அவருக்கு முன்னமேயே அங்கே சென்று சற்றும் எதிர்பாராத
வகையில் தரிசனம் அளிக்கிறார். பாபா தமது அடியவர்களின் நலனுக்காக யாது கூறியிருக்கிறார்
என்பதைக் கவனியுங்கள்:
"யார்
அதிஷ்டசாலியோ எவருடைய பாவங்கள் ஒழிந்தனவோ, அவர்கள் எனது வழிபாட்டை எய்துகிறார்கள். 'சாயி சாயி' என்று எப்போதும் கூறிக்கொண்டிருப்பீர்களானால் நான் உங்களை ஏழ்கடலுக்கும் அப்பால்
எடுத்துச் செல்வேன். இம்மொழிகளை
நம்புங்கள். நீங்கள் நிச்சயம்
நன்மையடைவீர்கள். வழிபாட்டின் கூறுகள்
எட்டோ, பதினாறோ எனக்குத்
தேவையில்லை. எங்கு முழுமையான பக்தி
இருக்கிறதோ அங்கு நான் அமர்கிறேன்".
No comments:
Post a Comment