*நம்பிக்கையுடன் பாபாவை வணங்கும் பக்தர்கள் அனைவருக்கும் எல்லா இடமும் துவாரகாமையியே! பாபாவை தவிர
வேறெதிலும் நாட்டமில்லாத பக்தர்களாலேயே இது முற்றிலுமாக உணரப்படும். அப்படிப்பட்ட பக்தர் கடல்
கடந்து இருந்தாலும் பாபா அவருடனேயே
இருப்பார். தனக்காக எந்த விதமான பூஜை முறைகளையோ, விரதம் இருக்கவோ பாபா
கூறியது இல்லை. அவர் கேட்பது அசைக்க முடியாத நம்பிக்கையை மட்டுமே. பாபா மீது
அத்தகைய நம்பிக்கை உங்களுக்கு இருக்குமானால், இயலாத காரியம் என்று
எதுவுமில்லை.
*என்னிடம் அடைக்கலம் தேடி வந்தவர் நிவாரணம் பெறவில்லை என்பது, சென்றகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய
முக்காலங்களிலும் நடக்காத விஷயம். உங்களுடைய காரியம் கைகூடும் என்று அறீவீர்களாக
.- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
No comments:
Post a Comment