Monday, August 21, 2017

ஜாம்நேர் அற்புதம்



நாநா சந்தோர்கர்,  தன் மகளின் பிரசவ  வேதனையைப்பார்த்து, மிகுந்த வேதனையடைந்து, சாயியை துதித்தார். சாயி  டி வந்தார் துயர் துடைக்க.. ராம்கீர்புவா என்பவரை பாபா  கூப்பிட்டு, அவர் அவரது வீட்டுக்குப் போகும் வழியில் உள்ள ஜாம்நேரில்,. நானா சாஹேபிடம் உதியையும், ஆரத்தியையும் அளிக்கும்படிச் சொன்னார். அவருடைய வழிச்செலவு அனைத்தும்  பாபாவே கவனித்துக் கொண்டார். 
அப்போது  ஒரு இடத்தில், ஒருவன் அவர் முன் வந்து, தாம் நானா சாஹேபிடமிருந்து வருவதாகவும், அவருடைய வேலையாள் என்றும், அவர் சாப்பிடுவதற்காகச் சிற்றுண்டியும்  கொடுத்தனுப்பியிருக்கிறார்  என்றும் கூறி,  குதிரை வண்டியில் அவரை அழைத்துச் சென்றான். 
இருவரும் ஜாம்நேரை அடைந்தனர்.  திடீரென, வந்தவன் மாயமாகி மறைந்து விட்டான்.   ராம்கீர்புவா தேடியும்  வண்டியையும் காணோம், வேலையாளையும் காணோம். இது சாயியின்  மிகப் பெரிய லீலை.
சாயிதான் வேலையாள் உருவில் வந்து உதவி செய்தார்.   ராம்கீர்புவா நாநாசந்தோர்கரிடம் பாபா கொடுத்தனுப்பிய உதியையும் ஆரத்திப்  பாடலையும்  சரியான   நேரத்தில்   கொடுத்தார்.  மைனாதாயின் உடம்பு குணமாகியது..
ராம்கீர்புவா நாநாசந்தோர்கரிடம்  வழியில் உதவி செய்ததற்கு நன்றி கூறினார். ஆனால் நாநாசந்தோர்கர்,  தான்   யாரையும் அனுப்பவில்லை என்று கூறி இது பாபாவின் செயல் என்று அறிந்து  பாபாவின் அன்பை பார்த்து  வியந்தார்.
அதேபோன்று, நோய்வாய்பட்ட நாராயண்ராவ் என்பவர்,  பாபாவை அல்லும், பகலும் தியானித்தார்.  ஒரு நாளிரவு கனவில் அவர் ஓர் காட்சி கண்டார்.
பாபா நிலவறை ஒன்றிலிருந்து வெளிவந்து அவருக்கு ஆறுதலளித்து, "கவலைப்படாதே, நாளையிலிருந்து நீ குணமடைவாய்.  ஒரு வாரத்திற்குள் நன்றாக நடமாடுவாய்" என்று கூறினார்.  கனவில் குறிப்பிடப்பட்ட தினத்திற்குள் நாராயண்ராவ் பரிபூரண குணமடைந்தார். 

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...