இந்த
உடம்பு பஞ்சபூதங்களால் ஆனது என்கிறோம். எந்தெந்த
உறுப்பும், உருவாகும் பொருள்களும் எந்த எந்த பூதத்திற்கு
உரியவை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
நிலம்:
உறுப்புகளில் பெரியதும்,
நிலையானதும், உருவுள்ளதும், பளுவுள்ளதும், கடின உறுப்புகளான நகங்கள், எலும்புகள், பற்கள்,
மாமிசம், தலைமயிர், தாடி உரோமங்கள், மலம்
ஆகியவை நிலத் தாது சம்பந்தப்பட்டவை.
நீர்:
நகரும்
இயல்புள்ள திரவம், ரசம் ஆகியவையும்,
பிசுக்குத் தன்மையுள்ள மந்தமான திரவமும், மென்மையான
திரவமும், ஒட்டும் தன்மையுள்ள பிச்சிலம் என்ற இயல்புகொண்ட
ரசமும், இரத்தம், மாமிசப் பசை, கபம்,
பித்தம், சிறுநீர், வியர்வை போன்றவை நீர் சம்பந்தப்பட்ட உறுப்புகள்.
நெருப்பு
: உடலிலுள்ள
பித்தம், சூடு, பளபளப்பு இவற்றைச் சேர்ந்தவைகளும்,
நீலம், மஞ்சள் (பில்லிரூபின்கள்) போன்ற
நிறங்களும், கண் புலன்கள் ஆகிய இவை அனைத்தும்
அக்னி என்னும் பூதத்தைச் சேர்ந்தவை.
வாயு
: மூ்ச்சுக் காற்று, திறத்தல், மூடுதல்,
விரித்தல் சுருக்குதல், செல்லுதல், தூண்டுதல், தரித்தல், தொடுதல் மற்றும் தொடு
புலன்கள் ஆகியவை காற்று என்னும் பூதத்தைச்
சேர்ந்தவை.
ஆகாயம்:
நாசித்
துவாரங்கள், ரோமத் துவாரங்கள், செவித்
துவாரங்கள் மற்றும் புலன்கள், ஓசைகள்
இவை அனைத்தும் ஆகாயம் சார்ந்த உறுப்புகள்
ஆத்மா:
மனம்,
உணர்வு, அறிவு எனச் செயல்பட்டு உடலைத்
தூண்டுகிற இதுவே ஆத்மா என்னும் சொல்லால்
குறிக்கப்படுகிறது.
சரகசம்ஹிதை
No comments:
Post a Comment