என் அன்புக்குழந்தையே!
இன்று காலை நீ எழுந்ததில் இருந்து, உனக்கு எதுவும் சரியில்லாததை போலத் தோன்றுகிறதா, அது உன்னுடைய பிரம்மை,
உனக்கு நடக்க இருந்த
கெட்ட விஷயங்களை நான் தடுத்து உள்ளேன், அந்த நிகழ்வு நடந்திருந்தால் உன் பெயருக்கு கெட்டது, பங்கம் வந்து இருக்கும், அதனால் நீ தேவையில்லா விஷயங்களை நினைத்து வருந்தாதே, உனக்கு உடம்பு சரியில்லை
என்று புலம்பி கொண்டே இருந்தால் சரியாகி விடுமா என்ன? அதற்கான மருந்தாய் நான்
அருளும் உதியை தண்ணீரில் கலந்து குடி, சரியாகி விடும்.
உன் உடம்பு ரணமாய் மாறி வலியை ஏற்படுத்துகிறது, அதை உன் சாய் அப்பா உணராமல் இருப்பேனா,
கொஞ்சம் பொறுத்துக்கொள், உன் உடம்பில் ஏற்பட்ட
வலியால், நீ துடிக்கும் போது என் உயிரே போகிறது, உனக்கு வலியை தாங்க எதிர்ப்பு
சக்தியை கொடுப்பேன், கொஞ்சம் அதுவரை பொறுத்திரு வலியை.
என் தங்கமே, மனதில் உள்ள சோகத்தை தூக்கி எறி, உனக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால்,
அதற்காக வருந்தாதே. இந்த உலகில் நமக்கு எல்லோரையும் பிடிக்கும் என்று இல்லை,
அப்படி உனக்குப் பிடிக்காதவர்கள்
இருந்தால், உனக்குள் ஒன்றை மட்டும் நினைத்துக்கொள், நீ அவர்களுக்குப்பிடித்தது போல நடிக்கவில்லை, உனக்கு எது நியாயம் என்று பட்டதோ அந்த நல்லதை மட்டும் செய்தாய்,
அதனால் நீ
எதற்காகவும் வருந்தாதே, மற்றவர்களிடம் உனக்கு பிடித்ததைக்கூட கூறு, ஆனால் இது எனக்குப்பிடிக்காது, இவர்களை இந்தக்காரணத்திற்காக பிடிக்காது
என்று மட்டும் எவரிடமும் கூறாதே, அவர்கள் உன் முன் உண்மையானவர்களாய் தெரியலாம், ஆனால் உனக்கு
பின்பு என்ன பேசுகிறார்கள் என்று உன்னால் தெரிந்து கொள்ள முடியாது, உனக்கு எந்த நிலையிலும் உன் அம்மாவாய் அப்பாவாய் நான் துணை நிற்பேன் !!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா
No comments:
Post a Comment