ஹர்தாவைச் சேர்ந்த
சிந்தே என்பவருக்கு ஏழு புத்திரிகள், ஒரு புத்திரன் கூட இல்லை. 1903-ம் ஆண்டில் அவர் கங்காபூருக்குச் சென்று ஒரு புத்திரனை வேண்டி தத்தரிடம்
பிரார்த்தனை செய்து கொண்டார். 12 மாதங்களுக்குள் ஒரு மகன் பிறந்து விட்டால், குழந்தையுடன் தரிசனம் செய்ய
கங்காபூருக்கு வருவதாக நேர்ந்து கொண்டார். அவருக்கு 12 மாதங்களில் மகன் பிறந்தான்;
ஆனால் அவர் குழந்தையை எடுத்துக் கொண்டு
கங்காபூருக்கு செல்லவில்லை. 1911-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் ஷிர்டிக்கு பாபாவிடம் வந்தார். அப்போது அவரிடம் பாபா
கோபமாக இவ்வாறு கேட்டார்.
பாபா : என்ன! திமிறு
ஏறி விட்டதா உனக்கு? உன் பிராரப்தத்தின் படி (விதிப்படி) உனக்கு ஏது ஆண் குழந்தை? நான் இந்த உடலை (தமது உடலைக் காட்டி) கிழித்து உனக்கு ஒரு ஆண் மகவு அளித்தேன்.
இதிலிருந்து
தத்தர், பாபா வேறு வேறு அல்ல என நாம் புரிந்துக்கொள்ளலாம். மேலும் பாபாவின் மற்றொரு அடியவரான
தாமோதர ராசனேவிற்கு கூட, பாபா ஜோதிட பூர்வமான தடைகளையும் மீறி
புத்திரப்பேறு அருளினார் என சத்சரித்திரம் தகவல்
அளிக்கிறது.
No comments:
Post a Comment