Friday, February 22, 2013

உன்னை வழி நடத்திச் செல்வேன்

இதன் முன் பகுதியினை படிக்க இங்கு செல்லவும்

நேற்றைய தொடர்ச்சி......



உடலில் ஒரு புதுமையான புத்துணர்வு ஏற்பட்டது. என்னால் அதை உணர முடிந்தது. பிறகு நான் முற்றிலும் எந்த துணையுமில்லாமல் எழுந்து நடக்க ஆரம்பித்தேன். அனைவருக்கும் ஆச்சரியம் கலந்த சந்தோம். என் பெற்றோரும் தங்கையும் ஆனந்தத்தில் மிதந்தனர். கண்களில் நீர் வழிந்தது. மனப்பூர்வமாக பாபாவுக்கு நன்றி செலுத்தினர்.
 
ஜூலியானா சாயி ராம் சொன்ன வார்த்தைகள்,பாபா உனது கஷ்டங்களை தாங்கிக்கொண்டார். உன்னை எப்பொழுதும் தாங்கிப் பிடிப்பார். ஒரு தூண்போல் நின்று, அன்னையைப் போல் தாங்குகிறார். பக்தியுடனும், நம்பிக்கையுடனும் இரு. அவர் உன்னைப் பார்த்துக்கொள்வார்’,  என்றார். பாபா, அனைத்தையும் நீ நடத்துகிறாய். நான்உன் குழந்தை என்றுதான் பிரார்த்தனை செய்வேன்.
பாபாவின் துணையோடு பன்னிரண்டாம் வகுப்பில் 89 சதவிகித மதிப்பெண்கள் பெற்றேன். பாபாவுக்கு  நன்றி கூறினேன். நான் என்ன ஆகவேண்டும். எந்தத் துறை எடுக்க வேண்டும் என்று பாபா முன்பே முடிவு செய்து விட்டார். வாதநோயால் அவதியுற்ற தருணத்தில் பல அலோபதி மருத்துவர்களிடம் சென்றபொழுது சரியான தகவல் கூறமுடியாமல் இருந்தனர்.
அப்பொழுது பாபாதான் ஆயுர்வேத மருத்துவ முறைக்கு அனுப்பிவைத்தார் என நினைக்கிறேன்.  வடபழனி விஜயா மருத்துவமனையில் ஆயுர்வேத மருத்துவராகப் பணிபுரிந்த டாக்டர் மனோஜ், அவர்கள் என்னைப் பார்த்து, கண்டிப்பாக குணப்படுத்திவிடலாம், கடவுள் நம்மோடு இருக்கிறார்’ என ஆர்வத்தோடு கூறினார். அவரைப்பார்த்த பொழுது நம்பிக்கை பிறந்தது.
எனக்கு பஞ்ச கர்மா என்ற சிகிச்சையை செய்தார்கள். முதுகுத் தண்டிலும் கால்களிலும் பலம் உண்டானது. அவர்தான் எனக்கு முன் உதாரணமாக இருந்தார். அவரைப் போல நானும் ஆயுர்வேத மருத்துவத்தைப்படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இதற்காக பாபாவிடம் பிரார்த்தனை செய்தேன்.
கவுன்சிலிங் மூலம் எனக்கு ,  சாயி ராம் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, மேற்கு தாம்பரத்தில் சீட் கிடைத்தது. நன்றாகப் படித்தேன். கர்மவினைகள் என்னைத் தொடர்ந்து வந்தன. படித்துக்கொண்டிருக்கும் பொழுதும் வலியால் அவதியுற்றேன். அப்போது பிரியா சாயி ராம் என்னை அரவணைத்துக் கொண்டார். கவலைப்படாதே, சில காலத்திற்குள் எல்லாம் சரியாகிவிடும்என்றார். அதைப் போல அனைத்தும் சரியாகிவிட்டன.
பாபாவின் துணையோடும் அவருடைய ஆசீர்வாதத்தோடும் இன்று அவரே என்னை டாக்டராக உருவாக்கினார். பட்டம் வந்ததும் அவரிடம் சமர்ப்பித்தேன். சாயி என்னோடு எப்பொழுதும் துணையாக இருங்கள். இந்தப் பட்டம் ங்களுடையது என்று கூறி மனதார நன்றி கூறினேன்.
அதன் பிறகு பாபா என்னை வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்திற்கு அழைத்துச் சென்றார். திருமணம் நல்ல முறையில் நடந்தது. எனது கணவரும் பாபாவிடம் மிகுந்த பக்தியுள்ளவர். அவர் எனது நிலையைத் தெரிந்துகொண்டுதான் என்னைத் திருமணம் செய்துகொண்டார். என்னை நன்றாகக் கவனித்துக் கொள்கிறார். அனைத்து உபாதைகளை யும் கடந்து நாங்கள் சந்தோக்ஷமாக வாழ்கிறோம்.
பாபாவின் அருளால் நாங்கள் வீடு வாங்கினோம். அதிலும் அற்புதம் நிறைந்திருக்கிறது, வீடு பெருங்களத்தூர் பாபா கோயில் அருகில்தான் அமைந்துள்ளது. அனைத்தும் அவர் செயல்.  ங்கு சென்றாலும் கண்டிப்பாக வருவேன். உனக்கு முன் நான் அங்கு நிற்பேன், உன்னை என்றைக்கும் கைவிட மாட்டேன். உனது ஒவ்வொரு முயற்சியிலும் நான் உன்னோடு இருக்கிறேன்,’ என்று பாபா உத்தரவாதம் தருகிறவர்.
ஆகையால் நாம் ஒவ்வொருவரும் ஆத்ம ஸ்வரூபமான சாயியிடம் நம்பிக்கையுடனும் பக்தியுடனும் இருந்தால் நிச்சயமாக சாயி நமது  அருகில் இருப்பார், நம்மை வழி நடத்திச் செல்வார்.
ஜெய் சாய் ராம்!

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...