Saturday, February 23, 2013

மலேசியாவில் சீரடி ஞான பீடம்




            மலேசியாவில் கோலாலம்பூருக்கு 35 கிலோமீட்டர் தொலைவிலும், கில்லாங் என்ற இடத்திலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள சிலாங்கூர் என்ற இடத்தில் மனோதத்துவ மருத்துவராகவும், சீரடி சாயி ஞான பீடம் என்ற சேவை அமைப்பை நிறுவியும் தொண்டாற்றி வருகிறேன்.
        நான் மனோதத்துவத்தைப் படிக்கக் காரணம், சிறிய வயதிலேயே பெற்றோர்கள் பேசும்போது, மனதை புரிந்துகொள்ளூ என்று எதற்கெடுத்தாலும் கூறுவதை அடிப்படையாக வைத்து, மனதில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில்தான் படித்தேன்.
         இந்தியாவில் சுமார் எழுபது அல்லது எண்பதாயிரம் ரூபாயில் ஒரு சொகுசான வாழ்க்கையை மாதந்தோறும் நடத்தலாம். ஆனால் மலேசியா பொருளாதார வளம் மிக்க நாடு.. மலேசியாவில் இவ்வளவு சம்பாதித்தால் தான் ஓரளவு சுமாராக வாழ முடியும்.. இப்படிப்பட்ட நிலையிருப்பதால் மக்கள் கடுமையாக உழைத்து பொருள் தேட வேண்டிய கட்டாயம் அதிகம். இதனால் அவர்களுக்கு மன இறுக்கமும், மன உளைச்சலும் அதிகம். இத்தகைய சூழல்களால் குடும்பங்களில் நிம்மதியற்ற நிலை இயல்பாகக் காணப்படுகிறது. இவற்றைப் போக்கும் உபாயங்களோ, மருத்துவ வசதியோ மிகவும் குறைவு. அதுவும் இந்திய வம்சாவளியினருக்கு இது குறைவாக இருக்கும். இவற்றைப் போக்கும் விதத்தில்தான் மனோதத்துவப் படிப்பைத் தேர்வு செய்தேன்.. சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய பேராசிரியர் டாக்டர் காதர் இப்ராகிம் அவர்கள், நீ சாயி பாபாவை கும்பிடு. உனக்கு நல்ல வழியைக் காட்டுவார் என போதித்தார். அவர்தான் என் மானசீக குரு. அவர் வழிகாட்டுதலின் பேரில் தான் நான் சாயி பாபாவைப் பிடித்துக் கொண்டேன். சாயி பாபாவின் அனுக்கிரகத்தோடு, மலேசியாவில் பக்தி மார்க்கம், குரு மார்க்கம், சித்த நெறி, குரு வாழ்வியல் தத்துவங்கள், ஆறு ஆதாரங்கள், ஒளி வட்டம் போன்ற விக்ஷயங்களை அங்குள்ள மக்களுக்குக் கற்றுத் தருவதற்காக என்னால் உருவாக்கப்பட்ட அமைப்புதான் சீரடி சாயி ஞான பீடம்.
              இதில் பேச்சுப் பயிற்சி., மனோவியல் பயிற்சி போன்றவற்றையும் அளித்து வருகிறோம். பாபா எங்களை ஆசீர்வதிப்பதைப் போல, மலேசிய மக்களையும் ஆசீர்வதிக்கப் பிரார்த்தனை செய்கிறோம்.

டாக்டர் சத்திய சீலன் சுப்பிரமணியன், சிலாங்கூர், மலேசியா.


No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...