என் பெயர் ஸ்நிக்தா. எனது கணவரின் பெயர் வே. பிரகாஷ். எங்களது வாழ்க்கையில் சாயி பலவிதமான அற்புதங்களைச் செய்திருக்கிறார்.
நான் சிறுவயது முதல் என் பெற்றோர்களுடன் சாயி கோவில்களுக்குச் செல்வது வழக்கம்.
பத்தாம் வகுப்பு படிக்கிறபொழுது வாதநோயால் தாக்கப்பட்டேன். அதன் விளைவாக தீவிரமான
இடுப்பு வலி, கால்வலியால் அவதியுற்றேன். நடப்பதற்கு மிகவும்கடினமாக இருக்கும்.
என் சாயி என்னைக் கண்டிப்பாகக் காப்பாற்றுவார் என்று நம்பிக்கையுடன்
இருந்தேன். அப்பொழுது எனது தோழி அபிநயா, பொன்னி மிஸ் டியூக்ஷனில் (தற்பொழுது
சாயி விஸ்வநாத் மந்திர், பழவந்தாங்கல்)
படித்துக்கொண்டிருந்தாள். அங்கு எனது நிலையைக் கூறி அவர்களிடம் ஆலோசித்தார். அப்பொழுது
சாயி அடியார் ஒருவர் அங்கு நடக்கிற பஜனையில் கலந்துகொள்வார்.
அபிநயா எனது நிலையைஅவரிடம் தெரிவித்தவுடன் எனது வீட்டிற்கு வந்து
பிரார்த்தனை செய்து விபூதி பிரசாதம் அளித்தார். ”கவலைப்படாதே, பாபா உன்னாடு இருக்கிறார்” என்றார். அவரது வார்த்தைகள் என்னை மேலும்
வலுவூட்டின. எனது பெற்றோர்களிடத்திலும் நம்பிக்கை பிறந்தது. பத்தாம் வகுப்பு
பரீட்சையைஎழுதினேன். அதில் 85 சதம் மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சிப் பெற்றேன்.
நான் படித்த பிரின்ஸ் மெட்ரிகுலேக்ஷன்ஸ் மேல்நிலைப் பள்ளியின்
பிரின்சிபால் டாக்டர் கே. வாசுதேவன் அவர்களுக்கு நன்றி கூறவேண்டிய நிலையில்
இருக்கிறேன். அவர்தான் என்னை அடிக்கடி ஊக்குவித்து கண்டிப்பாக நீ தேர்ச்சி பெறுவாய்
என்பார். அவர் சொன்ன வார்த்தைகள் சாயி சொன்ன வார்த்தைகள் போலிருந்தன. இந்த ஊக்கம்
எனது தேர்ச்சியை உறுதி செய்தது.
மேல் நிலை வகுப்புகள் படிக்கும் போதும் சில உபாதைகள் இருந்தன.
பன்னிரண்டாம்வகுப்பின் போது அமெரிக்காவிலிருந்து ஜூலியானா சாயி ராம் என்பவர்
வந்திருந்தார். பொன்னி மிஸ் மற்றும் அபிநயா ஆகியோர் ஜூலியானாவை என்னிடம் அழைத்து
வந்தார்கள். அப்பொழுது இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருந்தது. அவர் என்னை பார்த்துவிட்டு, சீரடியிலிருந்து அவருக்கு வந்திருந்த சாயிபாபாவின் சால்வையை என் மேல் அணிவித்தார். பிறகு
அவர் கையை என் தலையின் மீது வைத்து பிரார்த்தனை செய்தார்.
இதன் தொடர்ச்சி நாளை.........
No comments:
Post a Comment