Tuesday, February 19, 2013

கஷ்டங்கள் தொடர்வது ஏன்?



இருபதாண்டுகளாக பாபாவை மட்டுமே வணங்குகிறோம்.  அப்படியிருந்தும் இந்தக் கஷ்டங்கள் தொடர்வது ஏன்? இதை நிவர்த்தி செய்வது எப்படி?
( ஆர். யோகநாதன், வேலூர்)

 இந்த கஷ்டங்கள் வருவதற்குக் காரணம் அவரது அனுக்கிரகம்தான். தனது மகன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தந்தையார் கண்டிப்பதைப் போல, தனது மாணவன் கல்வியில் தேர்ச்சியடைய வேண்டும் என்பதற்காக கடுமையான தேர்வுகளை வைக்கும் ஆசிரியரைப் போல, தனது உண்மையான பக்தனை எப்பொழுதும் இறைவன் சோதனைக்கு ள்ளாக்குவான். ஒருமுறைதான் சோதனை வந்துவிட்டதே, மீண்டும் ஏன் சோதனை என எண்ணத் தோன்றும். நான் தீவிர சாயி பக்தன், எப்பொழுதும் அவரது நாமத்தை இடைவிடாமல் தியானம் செய்கிறேன் என்ற கர்வம் எந்த சூழலிலும் வந்துவிடக்கூடாது என்பதில் கடவுள் கவனமாக இருப்பார். அதனால்தான் சோதனைகளை அடிக்கடித்தந்து தனது பக்தனின் பக்தியை ஒரே மாதிரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்வார்.
தனது நினைவு பக்தனுக்கு ஆழமாக, இதயத்திலிருந்து வரவேண்டும் என்பதற்காகவே ஸாயி பாபாவால் சங்கடங்கள் விளைவிக்கப்படுகின்றன. அந்த ங்கடம் எப்படியிருக்குமெனில், எதிரே புதர் செடி முள்ளால் நிறைந்த பாதை போல கஷ்டமாக இருக்கும். நம்பிக்கை ஆட்டம் கண்டுவிடும். மனதில் எண்ணற்ற சந்தேக அலைகள் தோன்றி நிம்மதியைக் குலைக்கும். எதற்காக இந்த பாபா என்னை தன் பக்தராக்க வேண்டும் என்று அங்கலாய்க்கும். இருப்பதை விட செத்துப்போவது நலம் என நினைக்கத் தோன்றும். இத்தகைய நேரங்களில் மன தைரியத்தோடு உறுதியாக சாயி பாபாவை தொழுதுகொள்ள வேண்டும். அவரது நாமத்தை இடைவிடமால் ஜபித்து, ங்கடத்தை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். இப்படித்தான் நீங்கள் இந்த இருபது ஆண்டுகளையும் நகர்த்தி வந்திருப் பீர்கள். அதைத் தொடருங்கள், ங்களுக்கு பாபாவின் மேல் நம்பிக்கை அதிகமாகும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...