Monday, February 18, 2013

தடையை வெல்லும் தாரக மந்திரம் 
அன்பான சாயியின் பிள்ளையே!
தடைகள் என்பவை நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல ஆயத்தம் செய்கிற வியம்.  எனவே தடை வரும்போது தைரியத்தை இழந்து விடாமல், அடுத்த இலக்கை நோக்கிப் பாய்வதற்குத்தயாராக இருக்கவேண்டும்.
அதுவும் சாயி பக்தர்கள் என்பவர்கள் சாமான்யமானவர்கள் கிடையாது. அவர்கள் புண்ணியம் மிகுந்தவர்கள். பாவங்களும், கர்ம கெடுவினையும் தீர்ந்த ஒருவன்தான் சாயி வழிபாட்டை எய்த முடியும் என்று பாபாவே உனக்குச் சொல்லியிருக்கிறார்.
இப்போது நீ செய்யவேண்டியதெல்லாம்,  சோர்வை நீக்கி புத்துணர்ச்சி பெறவேண்டியதுதான். மனிதர்கள் போடும் தடைகள் மலைகள் அல்ல, தாண்டுவதற்குச் சிரமமாக இருக்கும் என்று மலைத்து நிற்பதற்கு.  அவையெல்லாம் மடை திறந்த வெள்ளத்தின் முன்னால் கையால் அள்ளிப் போடப்பட்டுள்ள மணல் குவியலைப் போன்றவை. உன்னை அவை தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை தைரியமாக நினைத்துக் கொள்.. சிந்தனையை ஒருமுகப் படுத்துதைரியத்தை வரவழை.. கோழைகளைப் போல கூப்பாடு போடாமல், செயலாற்றத் தயாராகு. தடை தளர்ந்து போகும்.
பாபா என்ன சொன்னார் தெரியுமா?
நீ தண்டால் எடுக்க ஆரம்பி. (கடுமையானப் பயிற்சி) பாலைப் பற்றிய கவலை (பலன் பற்றிய கவலை) உனக்கு வேண்டா. ஏனெனில், உனக்குப் பின்னாலேயே நான் தயாராக ஒரு வட்டிலில் பாலை வைத்துக் கொண்டு நிற்கிறேன்.
ஆனால், நான் தண்டால் எடுக்கிறேன், நீர் எனக்கு வட்டில் வட்டிலாகப் பாலைத் திருப்தியுறும் வரை கொடும் என்று கேட்டால் (பலனைக் கேட்டால்), , அதெல்லாம் எனக்குத் தெரியாது என்று சொல்லிவிடுவேன். செயலாற்றுபவன் துடிப்பு உள்ளவனாக இருக்கவேண்டும் என்பார் பாபா. (சத் அத்தியாயம் 19)
பாபாவின் இவ்வாக்குறுதியை சத்தியம் என்று எடுத்துக் கொண்டு எவர் செயல்படுகிறாரோ, அவர் இந்த உலகத்திலும் மேலுலகத்திலும் சந்தோம் என்னும் சுரங்கத்தைக் கண்டுபிடித்தவர் ஆவார்.
இதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள்.
மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டு இருக்கிறhர்கள் என்று சொல்கிறோம். தேர்வு என்பது என்ன? அது ஒருவிதத் தடை.. அதைத் தாண்ட முடியாதவன் பழைய இடத்திலேயே இருப்பான், தாண்டியவன் புதிய இடத்திற்குப் போவான்.
இப்படித்தான் உங்களுக்கு இப்போது ஏற்பட்டு உள்ள தடைகளும்.. சாயி பக்தர்களாகிய நம்மைப்பொறுத்தவரை தடை என்பதே நமக்குக் கிடையாது. நாம் யாரை வணங்குகிறோம், அவருடைய சக்தி என்ன? யார் நமக்குப் பின்னால் இருந்து உதவுவது என்பதையெல்லாம் நாம் தெளிவாக அறிந்திருக்கும் போது எதற்காக பயப்பட வேண்டும்?
ஜெயிப்பதற்காகத்தான் உனக்கு தரப்பட்டுள்ளது
ஜெய ஜெய சாயி என்கிற தாரக மந்திரம்.
ஜெபி..
வெற்றியை வென்றெடு..

சாயியின் கிருபை!

    உருவமில்லாத இறைவன் பக்தர்களின்மேல் கொண்ட கிருபையினால் , ஸாயீயினுடைய உருவத்தில் சிரடீயில் தோன்றினான். அவனை அறிந்துகொள்வதற்கு , முத...