இன்றும் அற்புதங்கள் நிகழ்த்தும் பாபாவைத் தேடி இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில்
இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கிறார்கள். சாதாரண நாட்களில்
அங்கு தினமும் 50,000 பேர் வருவதாகவும், வியாழன், சனி , ஞாயிறு ஆகிய நாட்களில் அவர்களது
எண்ணிக்கை ஒரு லட்சத்தை தொடுவதாகவும், ஏனைய விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள்
வருவதாகவும் சீரடி பற்றிய ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
இந்தியா முழுதும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால், அவர்களது
வசதிக்காக குறைந்த வாடகை கட்டணத்துடன் கூடிய 1000 தங்கும் அறைகள் கட்டப்பட்டுள்ளன.
வெளியூர் பயணிகளின் வசதிக்காக கோவில் வளாகத்திலேயே ரெயிலுக்கு முன்பதிவு செய்யும் மையங்கள் இந்திய ரெயில்வே சார்பில் திறக்கப்பட்டுள்ளன.
திரண்டு வரும் பக்தர்களின் உணவுத் தேவையினை பூர்த்தி செய்வதற்காக அதிக இடவசதி கொண்ட
உணவுக்கூடமும் இக்கோவிலில் செயல்படுகிறது. ஆசியாவிலேயே மிகப் பெரிய உணவுக்கூடமான இங்கு
ஒரே நேரத்தில் ஏழாயிரம் பேர் சாப்பிடலாம்.
இங்கு உணவருந்த வரும் பக்தர்களுக்கு பத்து ரூபாய் கட்டணத்தில் பருப்புக்குழம்பு,
சாதம், சப்பாத்தி, பூரி, இரண்டு வகை கூட்டு மற்றும் இனிப்புடன் தரமான சாப்பாடு அளிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment