பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவர்கள் தனக்கு அத்வைத சாதனையைக்
கற்றுத்தந்த தனது குருவான தோதாபுரியிடம் ,
‘நீங்கள் ஏன் தினமும் தியானம் செய்கிறீர்கள்?’ என்று கேட்டார்.
அதற்கு தோதாபுரி, ‘பித்தளைப் பாத்திரத்தைத் தினமும் துலக்க வேண்டும்;
இல்லாவிட்டால் அதில் களிம்பு ஏறி கருத்துவிடும்’ என்றார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணர் விடாமல், ‘பித்தளைப் பாத்திரமாக இருந்தால்தானே தினம்
தினம் துலக்க வேண்டும்? அதுவே தங்கமாகிவிட்டால் தினமும் துலக்க வேண்டியதில்லை
அல்லவா?’ என்று கேட்டாராம்.
உண்மை என்னவெனில், எல்லோராலும் தங்கப் பாத்திரமாகி விட முடியாது. பகவான்
ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஓர் அவதார புருஷர்; அவர் சொக்கத்தங்கம் தான்.
No comments:
Post a Comment