Tuesday, February 12, 2013

சாயி அனுபவம்




நான் ஒரு சாப்ட்வேர் அலுவலகத்தில் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேடர் ஆக பணிபுரிந்து வந்தேன். எனது அலுவலகத்தில் பல்வேறு பிரச்சனைகள். தொடர்ந்து அங்கு பணிபுரிய முடியாத அளவிற்க்கு நெருக்கடியான சூழ்நிலையில் இருந்தாலும், அந்த வேலையினையும் விட முடியாத அளவிற்க்கு பொருளாதார நெருக்கடி. எனக்கு வேறு வழியில்லாத நிலையில் அங்கேயே தொடர வேண்டிய நிர்பந்தம். வேறு வேலை தேடி என்ன முயற்சித்தாலும் எதுவும் கை கூடவில்லை. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் முப்பது மாதங்கள் ஓடிவிட்டது. வாழ்க்கையே இருள் மயமான நிலை. இனி வெற்றி என்பது என் வாழ்வில் வரவே வராதா என்று ஏங்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.

இந்நிலையில் ஒரு நாள் திடீரென எனக்கு நான் 1994ம் ஆண்டு சீரடிக்கு சென்றபோது வாங்கி வந்த ஸ்ரீ சாயி சரித்ரா புத்தகம் ஞாபகத்திற்க்கு வந்தது. புத்தகம் வாங்கி வந்து வைத்ததோடு சரி, படிக்கவே இல்லை. படிக்க வேண்டும் என ஏதோ உள்ளுணர்வு தூண்ட உடனே படிக்க ஆரம்பிப்பது என முடிவு செய்தேன். அந்த நாள் எனக்கு மிக நன்றாக நினைவில் உள்ளது. அன்று 26-02-2004, வியாழக்கிழமை. ஸ்ரீ சாயி சரித்திரம் படிக்கத் துவங்கினேன். அன்று இரவு 9 மணி அளவில் நான் முன்பு எப்போதோ விண்ணப்பித்திருந்த அமெரிக்க அலுவலகத்தில் இருந்து தொலைபேசி மூலம் நேர்காணலுக்கு அழைத்தனர். நேர்காணல் ஒரு வழியாக பத்து மணிக்கு முடிந்தது.  அன்று வியாழக்கிழமை ஆனதால், உடனடியாக சாயி மந்திருக்கு சென்றேன். மணி பத்து ஆகிவிட்டதால், கோவில் மூடப்பட்டு உள்ளிருப்பவர்கள் மட்டும் வெளியே வந்து கொண்டிருந்தனர். என்ன செய்வது என்று புரியவில்லை. கண்களில் நீர் வழிய நின்றேன். அப்போது அங்கு  பணியில் இருந்த செக்யூரிட்டி ஒருவர், என்னை அழைத்து கோவிலுக்குள் சென்று பாபாவினை தரிசனம் செய்ய அனுமதித்தார்.

மார்ச் 3ம் தேதி, 2004 ஸ்ரீ சாயி சரித்திரம் முழுதும் படித்து முடித்தேன். அன்று பிற்பகல் 2.30 மணி அளவில் அமெரிக்க கம்பெனியின் இந்திய அலுவலகத்தில் இருந்து போன் வந்த்து. நான் அவர்களது கம்பெனிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் , அதற்கான கால் லெட்டரை அலுவலகத்தில் வந்து பெற்றுக்கொள்ளவும் தெரிக்கப்பட்டது.  எனது சந்தோசத்தினை வெளிப்படுத்த வார்த்தைகளேதுமில்லை, எனது குடும்பமே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்த்து. நானும் எனது குடும்பமும் சாயியிக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம். 

இந்திகழ்வுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும், புதிய புதிய மகிழ்ச்சியான நிகழ்வுகள் எனக்கும், என் குடும்பத்திற்க்கும் நிகழத் தொடங்கின. இப்போது நான் எதைப் பற்றியும் கவலை கொள்வதில்லை. சாயி என்னை நன்றாக கவனித்துக்கொள்கிறார்.

சாயியிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

ஜெய் சாயிராம்.

ஆங்கிலத்தில் தனது சாயி அனுபவத்தினை saibabaofindia.com  இணைய தளத்தில் பகிர்ந்து கொண்டவர் திரு சிவபிரசாத் அவர்கள்.

                                   தமிழ் மொழி பெயர்ப்பு: சபாபதி அன்புகணேசன்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...