Saturday, February 9, 2013

பாபா கேட்ட வெந்நீர்




                 ஷீரடி சாயிபாபா உருவச்சிலையினை சுத்தம் செய்வதற்க்கு தேவையான வெந்நீரினை, தமிழ் பேசும் கேரளாவினை பூர்விகமாகக் கொண்ட ஒரு குடும்பத்தினர் கொடுத்து வருகிறார்கள். இவர்கள் தந்த வெந்நீர் கொண்டு பாபா சிலையை கழுவிய பிறகே , சாதாரண தண்ணீரால் சிலை சுத்தம் செய்யப்பட்டு பூஜையும் நடத்தப்படுகிறது.  

                  “எங்களது பெற்றோர், சாய்பாபா கோவில் அருகே அமைந்துள்ள சிறிய வீட்டில் வசித்து வந்தனர்.  ஒரு நாள் இரவு. எனது தாயின் கனவில் தோன்றிய பாபா, தனது விக்ரகத்தை சுத்தம் செய்ய வெந்நீர் கொண்டு வருமாறு கூறியுள்ளார். அன்று முதல் இப்போது வரை எங்களது குடும்பத்தினரே, பாபாவின் விருப்பப்படி அவரது திருவுருவச் சிலையை சுத்தம் செய்ய வெந்நீர் தந்து வருகிறோம்….” என்கிறார் தற்போது மூன்றாவது தலைமுறையாக இக்கோவிலுக்கு வெந்நீர் தந்து வரும் பிச்சு என்கிற ராதாகிருஷ்ணன் அய்யர்.  

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...