Saturday, May 30, 2015

நவக்கிரகங்கள் காரணமா?



நவகிரகங்கள்தான் நமது அனைத்து விக்ஷயங்களுக்கும் காரணம் என இந்துக்கள் நம்புகிறார்கள். ஆனால் மற்ற சமயத்தவர் இது போன்று நம்புவதில்லையே அவர்களுக்கு இப்படிப்பட்ட விக்ஷயங்களில் இருந்து விலக்கு உண்டா?
( கே. பிரீத்தா, சென்னை -  33)
யார் நம்பினாலும் நம்பாமல் போனாலும் எல்லா சமயத்தவருக்கும் கிரகப் பலன்கள் உண்டு. இதை நாம் காலக் கணிதம் என்று கூறுகிறோம். எந்த இடத்தில் பிறக்கிறோம், என்ன நேரத்தில் பிறக்கிறோம் என்பதை வைத்து அவரது பொதுவான அம்சங்களை மட்டுமல்ல, அக்காலத்தில் துல்லியமாகவே கணித்தார்கள்.
மற்ற சமயத்தவர் குரு வழிபாடு செய்வதால், மற்றவற்றை நாடவேண்டிய அவசியம் இல்லாமலே போய்விடுகிறது. நீங்களும் அவ்வாறு குரு வழிபாடு செய்தால் கிரகங்களைப் பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை.



No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...