Wednesday, May 27, 2015

நல்ல வார்த்தை பேசுவோமா?



சிந்தநீயா ஹி விபதாம் ஆதாவெவ ப்ரதிக்ரியா
நகூப கனனம் யுக்தம் பிரதீப்தே வஹ்னினா க்ரிஹே

வரும் முன் தடுக்கவேண்டும். வந்து விட்டால் சமாளிக்கவேண்டும் என்பதுதான் இதற்குப் பொருள். முன்யோசனையுடன் நடந்தால் கடவுளும் நமக்கு உதவி செய்வார் என்பது நம்பிக்கை. வியாதி பரவும் சமயத்தில் முன் கூட்டியே தடுப்பூசி போட்டுக் கொள்வதைப் போல, பிரச்சினைகளை முன் கூட்டி தவிர்க்கத் தேவையான திட்டங்களைத்தீட்டுவது மிகவும் அவசியம். திட்டம் தீட்டும்போது நமது வார்த்தைகளும் சரிவர இருக்கவேண்டும்.
ஏனெனில், வார்த்தைகள் ஆயுதங்களை விட கூர்மையானவை. சரிவரப் பயன்படுத்தினால் வெல்வது நிச்சயம். தவறினால் வீழ்வது உறுதி. நாம் பேசும் வார்த்தைகள் சூழ்நிலையை மாற்றி சாதகமாக அமைக்கும் சக்தி வாய்ந்தவையாக இருக்க வேண்டும். பேசும்போது நமது எதிரில் கடவுள் அமர்ந்திருக்கிறார் என்று எண்ணிப் பேச வேண்டும்.
நம்முடைய வார்த்தைகள் பிறரை வாழ்த்துவதாக அமையவேண்டும். சபிப்பதாக அமைந்துவிடக்கூடாது. பேச்சுக்கள் மற்றவர்களின் துயரைப் போக்க வேண்டும். பதறிய உள்ளங்களை சாந்தப்படுத்த வேண்டும் வார்த்தைகள் சொல்லப்படும் போது உணர்ச்சியுடன் சொல்லப்பட வேண்டும்.
அன்பான வார்த்தைகள் தன்னம்பிக்கை தரும். ஆறுதலான வார்த்தைகள் தற்கொலையைத்தவிர்க்கும். இனிமையான வார்த்தைகள் நற்சூழலை வளர்க்கும். ஊக்கமான வார்த்தைகள் சோகத்தை விரட்டும். கனிவான வார்த்தைகள் உயிரைக்காக்கும். கருணையான வார்த்தைகள் காலமறிந்து சொன்ன வார்த்தைகள் கஷ்டத்தைத் தவிர்க்கும்.
தன்னம்பிக்கை வார்த்தைகள் மனச்சோர்வை விரட்டும். நகைச்சுவை வார்த்தைகள் மன இறுக்கத்தைத் தளர்த்தும். பண்பான வார்த்தைகள் இதயத்தைத் தொடும். பணிவான வார்த்தைகள் மரியாதையைக் கூட்டும். பொறுமையான வார்த்தைகள் கோபத்தை விரட்டும். மன அழுத்தத்தைக் குறைக்கும். வாழ்த்துகின்ற வார்த்தைகள் வசந்தத்தைக் கொடுக்கும்.
ஒரு யுத்தத்தை வார்த்தைகளால் தொடங்க முடியும். முடித்து வைக்கவும் முடியும். சில வார்த்தைகள் கசக்கும். சில வார்த்தைகள் இனிக்கும். சில வார்த்தைகள் இருட்டைப் போக்கும். சில வார்த்தைகள் மயில் இறகு போல் இதமாக இருக்கும்.
சிலருக்காகப் பேசப்படும் வார்த்தைகள் எல்லோருக்கும் பொருந்துவதில்லை. சில நேரங்களில் சொல்லும் வார்த்தைகள் மற்ற நேரங்களில் சொல்ல இயலாது. எனவே வார்த்தைகள் பிரயோகிக்கும் போதே யோசித்துப் பேசுவது நல்லது.
ஆனால், நமது குருநாதர் சாயி வரதராஜனின் வார்த்தைகள் பிரவாகமாக தங்கு தடையின்றி நேர்மறை வார்த்தைகளாக வெளிவந்து கொண்டே இருக்கிறது. அவரோடு ஒரு அரை மணி நேரம் இருந்து அவரது வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால், நீங்கள் தவறுதலான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டீர்கள்.
தவறான வழியில் செல்லமாட்டீர்கள். அவரது வார்த்தைகளால் இன்று எத்தனையோ குடும்பங்களில் ஒளி விளக்காக சுடர் விடுகிறது. சாயிநாதன் அவருக்கு அருளாசி வழங்கி வருவதைப் போல நாமும் நம்முடைய குருநாதரைப் பின்பற்றினால் சாயி அருள் நமக்கும் கிட்டும். நன்கு இருப்போம்.



சாயி கலியன்
 

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...