சீரடி சாயி பாபாவின் புகழ் அகில
இந்தியா முழுதும் பரவ முழு முதற் காரணம் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியே ஆவார். இத்தனைக்கும்
அவர் சீரடி சாயி பாபாவை நேரில் பார்த்ததில்லை. சீரடியில் 1936ல் முதன் முதல் அவர் சமாதி
முன் நின்றபோது அவர் உணர்வுகள் எப்படியிருந்தன?
அவர் சமாதியைப் ,பார்த்துக்கொண்டு அமைதியாக நின்றார். அவரது வாழ்க்கையில் மிக மிக மகிழ்வான தருணம் அது. சாயி பாபா எனும் ஆன்மீக நெருப்பு அலை நரசிம்ம சுவாமியின் உடல் முழுதுமுள்ள லட்சக்கணக்கான உயிரணுக்களைச் சூழ்ந்தது. அதற்கு மாற்றாக நரசிம்ம ஸ்வாமிக்கு ஒரு புது வாழ்வினைக் கொடுத்தது. அவருடைய பழைய உடல் மாறி சாயி ஸ்வரூபி நரசிம்ம ஸ்வாமியாக மாற்றம் பெற்றது.
ஒரு கண நேரத்தில் இந்த மாற்றம்
நிகழ்ந்தது. நரசிம்ம ஸ்வாமி ஆன்மீக உணர்வு பெற்றார். சாயியுடன் ஒன்றிவிட்டார். சுருக்கமாகச் சொன்னால் நரசிம்ம சுவாமி சாயியாகவே
மாறப்பெற்றார். மிகக் குழப்பத்தில் இருந்த
அவர் மனம் அமைதியுற்றது.
நீல வண்ண ஆகாயத்தைப் போன்று அவர்
மனம் சுத்தமானது. சாயி பாபாவின் முழு பொக்கிஷத்தையும் பெற்ற பாத்திரமானார். சாயி பாபா
அவரது ஆன்மீக உணர்வினை, உள்ளொளியினை தூண்டிவிட்டார். இதப் பெறுவதற்க்கு நரசிம்ம ஸ்வாமி கொடுத்த விலை
அதிகம். அவர்தான் சென்னை மயிலாப்பூர் பாபா
ஆலயத்தினை உருவாக்கியவர். பாபா பற்றிய பிரச்சாரத்தினை இந்தியா முழுதும் பரப்பியவர்.
No comments:
Post a Comment