Friday, May 22, 2015

தீட்சித்தின் மகனுக்கு பாபா செய்த அற்புதம்!



பாபா, தீட்சித்தின் மகனுக்குச் செய்த அற்புதம் சாய் லீலா மாசிக் என்ற புத்தகத்தில் வெளியானது.  இதை நரசிம்ம சுவாமிகள் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.
1913 - ம் ஆண்டு தீட்சித் தனது மனைவியுடன் சீரடிக்கு வந்து அங்கு  தங்கியிருந்த போது  தனது மகனை பாந்த்ராவிலிருந்த நண்பர் வீட்டில் படிப்பதற்காக அனுப்பி வைத்திருந்தார்.
தேர்வுக்கு ஒரு மாதம் இருக்கும்போது அந்தப்பையனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. மகனைப் பார்க்க வருமாறு நண்பர் கடிதம் எழுதி தீட்சித்துக்கு அனுப்பியிருந்தார்.
கடிதம் பாபாவிடம் காண்பிக்கப்பட்டது. பாபா ”தீட்சித் செல்வதற்கு பதில், பையனை சீரடிக்கு அழைத்துக் கொள்வது நல்லது” ,  எனக் கூறினார். இதனால் தேர்வு நெருங்கிக் கொண்டிருந்த நிலையிலும்,  தீட்சித் மகன் சீரடிக்கு வரவழைக்கப்பட்டான்.
சீரடியில் பையன் குணமானான். தேர்வு நாள் 2 -11 - 1913 என்று  நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாபா பையனை தேர்விற்க்கு அனுப்ப மறுத்துவிட்டார். இதைக் கேட்டு பாந்த்ரா நண்பர் அதிர்ச்சியடைந்தார்.
தேர்வு நாள் 6 – 11 -1913 அன்று தள்ளி வைக்கப்பட்டதாகவும், பையனை அனுப்பி வைக்குமாறும் செய்தி வந்தது. அப்போதும் பாபா அந்தப் பையனை அனுப்ப மறுத்துவிட்டார்.
என்ன நடந்தது என்றால், தேர்வு இரண்டாவது முறையாக  1311-1913 க்குத் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்த முறை பாபா பையனை பாந்த்ரா செல்ல அனுமதித்தார். பையன் தேர்வு எழுதி, தேர்ச்சியும் பெற்றான்.
பாபா செய்த அற்புதத்திற்க்கு இதை விட ஒரு சரியான உதாரணம் ஏது?

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...