Friday, May 29, 2015

பக்தர்களைப் பின் தொடர்வார் பாபா!

சமீபத்தில் எங்கள் குழந்தைக்குப் பெயர் மாற்றம் செய்யவேண்டியிருந்தது. அதற்கான அலுவலகம் சென்று படிவம் வாங்கி பூர்த்தி செய்துகொண்டு இருந்தபோது, ஒரு பெரியவர் அருகில் வந்து, பேச்சுக் கொடுத்தார். அவரைப் பெரிதாக கண்டு கொள்ளாமல் எழுதிக்கொண்டிருந்தோம்.
பெயர் மாற்றத்திற்கான இடம் வரும்போது, எங்களை எழுதவேண்டாம் எனத் தடுத்து, நியூமராலஜி பார்த்துச் சொல்கிறேன் என கணக்குப் போட்டார். எங்கள் குழந்தைக்கு சாய் ஹரிதா என பெயர் சூட்ட நினைத்தோம். அவர் சாய் ஹரிதா ஸ்ரீ என பெயர் சூட்டுமாறு கூறினார். அதன் பிறகு அவர் சென்று விட்டார்.
வீட்டிற்கு வந்தபிறகு, அவர் யார்? எங்களிடம் மட்டும் ஏன் பேசினார்? அப்படி அக்கறையோடு சொல்லவேண்டிய அவசியம் என்ன என பேசிக் கொண்டோம். பாபாவே வந்து பெயர் மாற்றித் தந்ததாக நினைக்கிறோம்.
பாபா என்றைக்கும் பக்தர்களைப் பின் தொடர்வார். அவரது முடிவு பக்தர்களின் நன்மைக்கு வித்திடும் என்பதற்கு இது சிறந்த உதாரணம் என நினைக்கிறோம்.
பி. தங்கராஜ்
புளியம்பாக்கம்,
காஞ்சீபுரம் -  631 605

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...