எதிலும் வெற்றியடைய வேண்டும்,
பிரச்சினை அனைத்துக்கும் தீர்வு காண
வேண்டும், எல்லாம் சுபமாக
முடியவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிற நீங்கள்,
பாபாவின்
திருவாய் மொழியை கவனியுங்கள்.
”தண்டால் எடுக்க ஆரம்பி. பாலைப்
பற்றிய கவலை ஏதும் வேண்டா..”
என்று
கூறியிருக்கிறார்.
அவர் ஆன்மீகத்திற்காக இதைச்
சொன்னாலும், லவுகீகத்திற்கும் இது பொருந்தும். உனக்கு
என்ன தேவையோ அதைப் பெறும்
விதத்தில் செயல்படத்
தொடங்கு, பலனைப் பற்றி சிறிதும் கவலைப்படாதே
என்பது இதற்குப்பொருள்.
எதையும் கணக்குப் போட்டுச்
செய்வதைவிட, கடவுளிடம் ஒப்படைத்து செயலில் ஈடுபடுவது மிகவும் நல்லது.
ஏனெனில், விழுந்து விழுந்து புரண்டாலும் ஒட்டுகிற மண்தான் ஒட்டும் என்ற
பழமொழிக்கேற்ப, எவ்வளவு
முயற்சித்தாலும் பலன் என்னவோ பாபாவிடம் இருக்கிறது.
அவர் நம் பக்கத்தில் இருக்கிறார். செயலுக்கேற்ற பலனைத்தந்துவிடுவார்.
பாபா நான் கொஞ்சம் செயல்படுகிறேன், நீங்கள் நிறைய கொடுக்க வேண்டும் என்று கேட்டால், உடனடியாக
பாபா மறுத்துவிடுவார்.
சோம்பேறிக்கு அவர் இரக்கப்படுவதில்லை. யார்
உற்சாகமாக இருக்கிறானோ,
யார் துடிப்புடன் செயல்படுகிறானோ அவனுக்கு மட்டும்தான், அவன் கேட்பதற்கு மேல் தருவார்.
ஆகவே, இனி
சோம்பலுடன் இருக்கமாட்டேன்,
எதற்கும் தயக்கம் காட்ட மாட்டேன், எதையும் துணிந்து மேற்கொண்டு
செயல்படுவேன் என உறுதி எடுத்துக் கொண்டு
பாபா ஆலயம் செல்லுங்கள். அவர் பலனை உங்களுடனேயே எடுத்து
வருவார். இனி உங்கள் வாழ்வில் நல்ல
திருப்பங்கள் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும்.
No comments:
Post a Comment