அதிகாலையில்
சாயி நாம தியானம் செய்ய
நினைக்கிறேன். ஆனால்
காலை எழுந்ததும் வேறு எண்ணங்கள் மனதைத் துளைக்கின்றன. இதை
மாற்ற ஒரு வழி கூறுங்கள்.
(ஹரி
பாஸ்கர், செஞ்சி)
இரவு
படுத்த பிறகு சாயியைப் பற்றிய
நினைவுகளை சிந்தனை செய்துகொண்டே இருங்கள். நீண்ட நேரம் அவரைப்
பற்றிய சிந்தனையிலேயே இருந்து உறங்கிவிடுங்கள்.
காலையில்
எழுந்ததும் நீங்கள் நினைக்காமலேயே தானாக சாயி
நாம நினைவு வந்துவிடும். காலையில்
மட்டுமல்ல, எப்போது உறக்கம் கலைந்தாலும் நாம
ஜெபம் மட்டுமே மனத்தில் தோன்றும். இதைப்
பழக்கமாக்கிக் கொண்டால் நாம ஜெபத்தில் மனம் மூழ்கும்.
No comments:
Post a Comment