அன்னதானம் - 2
அன்னதானம் பகுதி ஒன்றின்
தொடர்ச்சி......
(பகுதி ஒன்றினை
படிக்காதவர்கள்
இங்கே கிளிக் செய்யவும்)
அன்னதானம் பாபாவிற்க்குப்
பிடித்தமானது என்பதால் இதை சாயி பக்தர்களாகிய நாம் விரிவாகச் செய்கிறோம். நம்மால்
முடியாதபோது, நம்மால் இயன்றதை கோயிலகளுக்குக் கொடையாக அளித்துவிட்டு
வருகிறோம். ஏழைகளுக்கு இரங்குகிறவன்
கடவுளுக்குக் கடன் கொடுக்கிறான் என பழமொழி உண்டு. நம் கர்மாவை கடவுள் அதிதி
வடிவிலோ, அன்னத்தை உண்பவர் வடிவிலோ எடுத்துக்கொண்டு நமக்கு புண்ணியத்தைச்
சேர்க்கவே இந்த அன்னதானம் என்பதை உணர்ந்துக்கொள்ள வேண்டும்.
அன்ன தானத்தை ஒரு கடன் என்றே நமது
முன்னோர்கள் கூறுகிறார்கள். தேவ கடன்,
ரிஷி கடன், பித்ரு கடன், பூதக்கடன், அதிதி கடன் ஆகிய இந்தக் கடன்களை அடைத்த பிறகே
ஒருவன் உண்ணவேண்டும். ஒவ்வொரு வேளை
உணவின்போதும் இவர்களுக்கு அன்னதானம் அர்ப்பணம் செய்யவேண்டும்.
சாப்பிடும் முன் தேவர்களுக்கு,
ரிஷிகளுக்கு, பித்ருக்களுக்கு, மூதாதையர் தேவர்களுக்கு, பூதங்களுக்கு நமது உணவினை
அர்ப்பணம் செய்யவேண்டும். பிறகு யாரேனும் விருந்தாளி வந்தால் அவர்களுக்கும்
தரவேண்டும். எறும்பு, பறவைகள், பூனை, நாய்
போன்றவையும் அதிதி என்கிறார் பாபா. அவைகளை அதிதிகளாகப் போற்றி உணவிட்டு அதன் பிறகே
நாம் உண்ண வேண்டும்.
அந்தக் காலத்தில் சாப்பிடும் முன்
மாவால் ஒரு சதுரம் வரைந்து, அந்த சதுரத்தின் மூலைகளில் உணவுப் பருக்கைகளில்
சிலவற்றை வைத்துவிட்டு சாப்பிடுவார்கள்.
சித்ரகுப்தனுக்கு, கடவுளுக்கு, பிறருக்கு என அந்த மூலையில் இடப்பட்ட
பருக்கைகள் அர்ப்பணிக்கப்படும். இந்த வழக்கம் இப்போது மாறிவிட்டது.
யாருக்கேனும் ஒரு கவளம் உணவு
அளித்தால் ஒரு மலையளவு அளித்த புண்ணியம் கிடைக்கும். ஒரு தம்ளர் நீர் அளித்தால்
கடலளவு நீரை தானம் செய்த பலன் கிடைக்கும் என முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளார்கள்.
பாபாவும், ‘யார் ஒருவன் எனக்கு
அர்ப்பணம் செய்யாமல் சாப்பிடுவதில்லையோ, அந்த பரம பக்தனுக்கு நான் அடிமை’ என்று
கூறியிருக்கிறார். இப்படிச் செய்கையில்
தேவார்ப்பணம் முடிந்து விடுகிறது.
இப்படியே நாம் ஒவ்வொருவரும் அன்னத்தை அர்ப்பணிக்கவேண்டும். முடிந்த போதெல்லாம் பிறருக்கு அன்னமளிக்க
வேண்டும்.
அன்னதானத்தின் மகிமை பற்றி ஒரு
கதை உண்டு.
அதனை நாளை பார்ப்போம்!
No comments:
Post a Comment