பிரம்ம
முகூர்த்தத்தில் எழுந்திரு
பிரம்ம முகூர்த்தத்தில்
எழுந்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்களே, அது எதற்க்காக?
-
ஆர்.நாகராஜ், போளூர்
காலை நேரம் என்பது மிகவும் அமைதியான காலம் என்பது மட்டுமல்ல, உடலின்
செயல்பாடுகளும் புத்துணர்ச்சியோடு இருக்கும். அதிகாலை 03.30 முதல் 05.00 மணி வரை
சத்துவ குணம் நிறைந்திருக்கும் காலமாகும். இந்த நேரத்தில் யாரும் யாரையும்
பழிவாங்கவேண்டும், பொருள் தேட வேண்டும் என நினைப்பதில்லை. மிக அமைதியாக எழுந்து
இறைவனை வழிபாடு செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபடும் காலம் இதுவாகும்.
இந்த நேரத்தில் மனிதன் தன் குரு, கடவுள், தேவர்கள், பித்ருக்கள், மகான்கள்
ஆகியோரை நினைவு கூர்வான். ஆகவேதான் இதை
சத்துவ குணம் நிறைந்த காலம் என்கிறோம். இப்படிப்பட்ட காலத்தில் நாம் எழுந்து
கொண்டால் அந்த நாள் மட்டுமல்ல, அதை அடுத்து வருகிற நாட்களும் நல்லவனாகவே அமையும்.
இதனாலாயே துயில் நீங்குவதற்க்கு பிரம்ம முகூர்த்தத்தினை நமது முன்னோர் தேர்வு
செய்தனர்.
- சாயி வரதராஜன்
ஸ்ரீ சாயி தரிசனம் நவம்பர் 2012 இதழில்
வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து
No comments:
Post a Comment