பாவங்கள் போக்கும் நாமா
கடவுளின் எந்த நாமத்தைச் சொன்னால் நமது பாவங்கள்
போகும்? - பி.கஸ்தூரி,
காஞ்சிபுரம்
கடவுளுக்கென
எந்தத் தனிப்பெயரும் கிடையாது. எல்லாமே காரணப்பெயர்கள்தான். இதில் எந்தப் பெயரைச் சொன்னாலும் நாம் செய்த
பாவங்கள் போகும் என்பதே உண்மை.
கடவுளுக்கு கல்
என ஒரு பெயர் வைத்து அந்தப்பெயரையே ஆத்மார்த்தமாக ஸ்மரணை செய்து வந்தாலும் நமது
பாவங்கள் போகும்.
அந்தக் கல்
என்பது கடவுள் என்ற உணர்வும் தானோ பிறரோ விரும்பாததைச் செய்வது பாவம் என்ற
தெளிவும் வந்து அவ்வாறு செய்யாமல் தன்னை உணர்ந்து கொள்ளல் முக்கியம். தன்னை உணராமல்
தொடர்ந்து கேடுகளை செய்தபடி பாவத்தையும் போக்கிக்கொள்ளலாம் என்றால் முடியாது.
உதாரணமாக
பள்ளிக்கூடம் போகாதவரையில் கல்வி கல்லாத வரையில் ஒருவரைக் கல்லாதவன் என்கிறோம்.
கல்வி கற்றபின்
அவரை கற்றவன், அறிவாளி என்கிறோம். கற்றவன் கல்லாதவனாக இருக்க முடியாது. அதை மறந்து
இருக்கலாம்.
அதைப்போல தன்னை
உணர்ந்த பின் பாவம் செய்யமுடியாது. பாவம்
செய்தால் தான் உணர்ந்ததை பறந்தி விட்டோம் என்று பொருள்.
- சாயி வரதராஜன்
ஸ்ரீ சாயி தரிசனம் நவம்பர் 2012 இதழில்
வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து
No comments:
Post a Comment