Thursday, December 6, 2012

ஞானத்தைத் தேடு



ஞானத்தைத் தேடு!
நீங்கள் சாஸ்திரங்களை கற்றவராகவோ, அதைக் கற்ற குடுப்பத்திலிருந்து வந்தவராகவோ தெரியவில்லை. பிறகு எப்படி இந்த ஞானமெல்லாம் தோன்றுகிறது?

- பி.கீர்த்தனா, சென்னை 48.

         ஞானம் பொதுவானது. அதை யார் நாடுகிறார்களோ அவர்களை அது நாடி வந்து அலங்காரம் செய்கிறது. சிலர் இந்த ஞானத்தை வைத்து நல்ல பிழைப்பை பார்க்கிறார்கள். நான் நல்ல பிழைப்பை வைத்துக்கொண்டு ஞான மார்க்கத்தில் நாட்டம் செலுத்துகிறேன். பாத்திரம் எதுவாக இருந்தால் என்ன? கொழுக்கட்டை நன்றாக வெந்தால் சரி! உலகத்தைப் பற்றியே சிந்திக்காமல் ஆன்மா பற்றியும் யோசிக்க ஆரம்பித்தால் எல்லாருக்கும் குரு அருளோடு ஞானம் கை கூடும்.

                                                     - சாயி வரதராஜன்

ஸ்ரீ சாயி தரிசனம் நவம்பர் 2012 இதழில்

வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...