பிரகாரம் எதற்கு?
கோயில்களில் பல அடுக்குகளாகப் பிரகாரங்கள்
வைத்திருக்கிறார்களே எதற்காக?
- கே யுவஸ்ரீ, சென்னை 33
மனம் எப்போதும் அலை பாய்ந்து கோண்டிருப்பது.
கோயிலுக்குப்போனாலும் தேவையற்ற சிந்தனைகள் நமது மனதைத் துளைக்கும். இதைத்
தவிர்ப்பதற்காவே கோயிலில் பிரகாரங்கள் அமைக்கப்படிருக்கும் என நம்புகிறேன்.
முதலில் பெரிய சுற்றாக வெளிப்பிரகாரம். இதைத்தான் முதலில் சுற்றி வர
வேண்டும். பிறகு அடுத்தடுத்த
உள்பிரகாரங்களை சுற்றி இறுதியில் கருவரையினை வலம் வரவேண்டும். பிறகு இறைவனை
தரிசிக்க வேண்டும். இப்படிச் செய்யும் போது அலை பாய்கிற மனதில் அடுக்கடுக்கான
சிந்தனைகள் தோன்றி படிப்படியாக மறைந்து கொண்டு வரும். கருவறையின் அருகே வரும் போது
மனம் அமைதியடைந்து பகவானை தரிசிக்கும் போது முழு ஈடுபாட்டுடன் பகவான் மீது
லயிக்கும். அங்கே சாந்தி நிலவும். பலர் நேராக கருவரைக்குள் இருக்கும் பகவானை
தரிசனம் செய்து விட்டு அதன் பிறகு மற்ற இடங்களை சுற்றிப்பார்ப்பது வழக்கம். இந்த
முறையினை மாற்றிக் கொள்ள வேண்டும்.
- சாயி வரதராஜன்
ஸ்ரீ சாயி தரிசனம் அக்டோபர் 2012 இதழில்
வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து
No comments:
Post a Comment