Saturday, December 31, 2016

நாராயண தரிசனம்




ராவணனை வதம் செய்த பிறகு, போர்க்களத்தில் ராமன் ஓய்வாக தரையை நோக்கியபடி அமர்ந்திருந்தார். அப்போது ஒரு பெண்ணின் நிழல் தெரிந்தது. அந்த நிழலுக்குச் சொந்தக்காரியான பெண்அவரது திருப்பாதங்களைத் தொட முயற்சிப்பதை அவளது நிழலின் நடவடிக்கை மூலம் புரிந்து கொண்டார். உடனே தனது காலை உள்ளிழுத்துக் கொண்டார்.
நீ யாரம்மா?” என்றார்.
நான் ராவணனின் மனைவி மண்டோதரி. என் கணவரை யாராலும் வெல்ல முடியாது என இறுமாந்திருந்தேன். ஆனால் அவரையே ஒருவன் கொன்று விட்டான் என்றால், அவனிடம் ஏதோ உயர்ந்த குணம் இருக்க வேண்டும் என நினைத்தேன். மேலும். க்ஷத்திரிய குல தர்மப்படி, கணவனை இழந்த பெண்ணை வெற்றி பெற்றவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் நீ வரவில்லை. ஆச்சரியப்பட்டேன். இங்கே என் நிழல் உன் மீது படுவதைக் கூட நீ விரும்பவில்லை என்னும் போது, உன் சிறந்த குணத்தை என்னவென்பேன்! என் கணவரிடம் கூட ரகு குலத்தில் உதித்த ராமன் மனிதன் அல்ல.
உலகைக் காக்கும் பரம்பொருள். விஸ்வரூபன். தன்னுடைய ஒவ்வொரு அங்கங்களிலும் உலகங்களையே தாங்கி நிற்கிறான். பாதாள லோகமே அவனது பாதங்கள். பிரம்மலோகமே அவன் சிரசு. கதிரவனே அவனது கண்கள். மேகமே அவனது கேசம். அவன் இமைப்பதே இரவு பகலாகிறது. திசைகளனைத்தும் அவனுக்கு செவிகள். அவனது திருநாமம் எல்லாப் பாவங்களையும் நொடிப்பொழுதில் போக்கவல்லது. அவன் வேதத்தின் சாரம். ராமன் சாட்சாத் தெய்வ வடிவம் என்பதில் சந்தேகம் இல்லை. அவனிடம் பகையை ஒழித்து சீதையை விட்டுவிடுங்கள்என்று மன்றாடினேன். அவர் கேட்கவில்லை. உன் வெற்றிக்கு காரணம், என் கணவரிடம் இல்லாத ஒரு நற்குணம் உன்னிடம் இருந்தது தான். அதுதான் உன் ஏகபத்தினி விரதத்தன்மை. அதனால் தான் நீ வென்றாய்,” என்றாள். உடனே ராமன் தன் சுயவடிவான நாராயணனாக அவளுக்கு விஸ்வரூப தரிசனம் கொடுத்தார்.
ராமாயணத்தில் பாக்கியவதியாகத் திகழ்ந்தவள் மண்டோதரி. அனுமன் இலங்கை சென்று ராவணனின் அந்தப்புரம் சென்ற போது, மண்டோதரி ஒழுங்காக உடையணிந்திருந்ததைக் கண்டு, இவள் சீதையாக இருப்பாளோஎன்று சந்தேகம் கொண்டான். அந்தளவுக்கு ஒழுக்கமுள்ளவளாக விளங்கியதால் தான், கெட்டவனுக்கு வாழ்க்கைப்பட்டும் அவளுக்கு நாராயண தரிசனம் கிடைத்தது.https://www.facebook.com/images/emoji.php/v6/fe3/1/16/1f490.png💐
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்https://www.facebook.com/images/emoji.php/v6/fe3/1/16/1f490.png

சாயி பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

மற்றவர்களைப் போல அல்லாமல் சாயி பக்தன் யதார்த்த பக்தி உள்ளவராக இருக்கவேண்டும்.  பக்தி என்பது நம்பிக்கையை வளர்த்து நம்மை கடவுளுடன் சேர்ப்பிக்கும் ஒரு சாதனம் என்ற உண்மையை உணரவேண்டுமே தவிர, நமது ஆசைகளை எல்லாம் பூர்த்தி செய்யும் மாயாஜாலப் பாத்திரம் என நினைக்கக் கூடாது.

Friday, December 30, 2016

வடக்குப் பார்த்தபடி பாபா

கீரப்பாக்கம் மலையில் பாபா வடக்குப் பார்த்து அமரும் விதத்தில் பீடம் அமைக்கப்பட்டுள்ளது.  இது ஏன் என பலரும் கேட்ட வண்ணம் உள்ளனர். சங்கடங்கள் தீர வடக்கு நோக்கி வழிபடுவது சிறப்பு என்பது ஒரு புறம் இருக்க, சாவடி ஊர்வலத்தின் போது, பாபா சுமார் ஒன்னரை நேரம் வரை வடக்குப்பார்த்து நின்றபடி வலது கையை மேலும் கீழும் அசைத்துக் கொண்டு இருப்பார். இதை நினைவூட்டும் விதமாக வடக்கு நோக்கி பாபாவை இங்கு பிரதிஷ்டை செய்கிறோம்.

கீரப்பாக்கம் வாருங்கள்... சீரடி சாயியினை தரிசியுங்கள்...மங்களம் பெறுங்கள்.

சாயி பக்தன் எப்படி இருக்கவேண்டும்?

இன்பமும் துன்பமும் இயற்கையின் நியதிகள்.  நமது செயல்கள். நாம் இருக்கும் சூழ்நிலை, வாழும் இடம், பழகும் நபர்கள் போன்றவற்றின் அடிப்படையில்தான் நமது வாழ்க்கையும் நலனும் அமைகின்றன. எனவே, சாயி பக்தர் இந்த காரணிகளை தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளத் தெரிந்தவராக இருப்பது அவசியம்.

Thursday, December 29, 2016

ஓம் சாய்...





அழகு அழகு உந்தன் பெயர் தான் சொல்ல
அமுது அமுது அந்த பெயர் தான்
எளிது எளிது உந்தன் பெயர் தான் சொல்ல சொல்ல
இனிது இனிது சாய் பெயர் தான்
நம்பி நீ நாடினால் உன்னை சாய் நாடுவார்
கண்ணின் இமை போல சாய் மாறுவார் வெம்பி நீ போகும் முன் வெற்றி கனி ஆக்குவார் மண்ணில் அரசாள உனை மாற்றுவார்
உன்னில் சாய் என்னில் சாய் எங்கெங்கும் சாய்

சாயி பக்தன் எப்படி இருக்கவேண்டும்?

நமக்கு நன்மை மட்டுமே எப்போதும் நடக்க வேண்டும்.  தீமைகள் நம்மை எள்ளவும் நெருங்கவேக்கூடாது என நினைப்பதும், எல்லாக் காலத்திலும் நோயற்ற வாழ்க்கை மட்டுமே வாழ வேண்டும் என நினைப்பது மனதின் விருப்பம்.

ஒரு காலத்தில் எதுவெல்லாம் நமக்கு சரியானதாக இருக்கிறதோ, எதுவெல்லாம் நமக்கு தேவையானதாக இருக்கிறதோ அதுவே பிறிதொரு காலத்தில் தவறாகவும், தேவையற்றதாகவும் ஆகும்.

 எனவே, மாற்றம் வாழ்க்கையில் இயல்பு என உணர்ந்து அதற்குத் தன்னை தயார்படுத்துகிறவராக சாயி பக்தர் இருக்கவேண்டும்.

Wednesday, December 28, 2016

ஓம் சாய்ராம்!



பச்சை ஆடை அணிந்தார்
பாபா பசுமையோடு இருந்தார்
இச்சையெல்லாம் தவிர்ப்பார்
பாபா இன்னல் களைந்திடுவார்
பிச்சை ஏந்தியே பாபா எம்
பிழை பொறுக்க வந்தார்
மிச்சமானதெல்லாம் பாபா
ஒரு பிடி சாம்பல்
இச்சகத்தில் உள்ளவற்றில்
ஆசையேதும் இன்றியே
துச்சமென நினைப்போம் பாபா
உம் அருளை மட்டும்
நாடி வந்தோம்
மச்ச அவதாரம் எடுத்த
கண்ணனின் சாயலோ பாபா
எச்சமயத்தவரும் வணங்கும்
இஷ்ட தெய்வம் பாபா
அச்சமில்லை எமக்கே
உந்தன் தாள் பணிந்த பின்பேBottom of Form

சாயி பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

இன்றைக்கு நமக்குத் துரோகிகளாக இருப்பவர்கள் கூட இதற்கு முன்பு  ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள்தாம் என்ற உண்மையை உணர்ந்து கொண்டால், நாம் எதிலும் அளவுடன் இருக்கத் தலைப்படுவோம்.  ஆகவே, யாரானாலும் ஓர் அளவுடன் நடந்து கொள்ளவும் விவேகமாக இருக்கவும் சாயி பக்தன் அறிய வேண்டும்.

Tuesday, December 27, 2016

சாயி பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

பாபா தனது பக்தர்களுக்கு பல்வேறு சாஸ்திர புத்தகங்களை படிக்கத் தந்தார்.  காரணம் என்னவெனில், ஒருவரை மனிதராகவும் பண்பட்டவராக மாற்றுவதும் சமயக்கல்வி என்பதைத் தெரிந்துக்கொள்ளத்தான்.  சாயி பக்தன் தவறாமல் சத்சரித்திரத்தைப் படித்து அதன் மீது நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

நம்பிக்கை, பொறுமை என்ற இரண்டு தரக மந்திரங்களைத் தவறாமல் பின் பற்றுபவனாகவும், எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பவனாகவும் இருக்கவேண்டும்.  எல்லாவற்றிலும் திருப்தியடையும் மனப்பக்குவத்தை சாயிபக்தன் உண்டாக்கிக்கொள்ளவேண்டும்.

Monday, December 26, 2016

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே




 
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே-எங்கள்
சாயி மதுசூதனன் புகழ் பாடுங்களேன்
 
 

தெங்கோடி தென்றல் தரும் ராகங்களே- எங்கள்
ஸ்ரீ சாயிகிருஷ்ணன் மூர்த்தி புகழ் பாடுங்களேன்
 
 
ஷீரடிநகர் தன்னில் அவன் தவழ்கின்றவன்
ஒரு கொடியோடு அவ்வூரை ஆள்கின்றவன்
  
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன்
அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
 

 
பாண்டவர்க்கு உரிமை கொண்ட பூமி கொடுத்தான் -நாம்
படிப்பதற்கு கீதை என்னும் பாடம் கொடுத்தான்

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...