மங்களம் அடைவீர்
ஒரு சமயம் ஜோக் என்ற பக்தருக்கு தபால் மூலம் பார்ல் ஒன்று வந்தது. அதை பிரித்துப்பார்த்தபோது அது பால கங்காதர திலகர் எழுதிய கீதா ரகஸ்யம் என்ற நூலாகும். அதை எடுத்துக்கொண்டு,  பாபா தரிசனத்திற்கு சென்றார் ஜோக். 
பாபாவின் பாதங்களில் விழுந்து அவர் வணங்கும் பொழுது, ஜோக்கின் கை இடுக்கில் வைத்திருந்த புத்தகம் கீழே விழுந்தது.. அதை கண்ட பாபா அது என்ன பாபு என்று ஜோக்கை கேட்டார். ஜோக் அந்தப்புத்தகத்தை பாபாவிடம் கொடுத்தார். பாபா புத்தகத்தை மேலோட்டமாக புரட்டினார்.
பாக்கெட்டிலிருந்து ஒரு ரூபாய் எடுத்து புத்தகத்தின் மேல் வைத்து இதை முதலில் இருந்து கடைசி வரை படியும் நீர் மங்களம் அடைவீர் என்று கூறி ஜோக்கின் மேல் துண்டில் வைத்து ஆசிர்வதித்தார்.
                                                                                         ( சாயி சத்சரிதம்- அத்தியாயம் 27}
Powered by Blogger.