ஆனந்த மழையாய் வா சீரடி பாபா

 
விதியாலும் மதியாலும்
சதியாலும் இங்கே
விளைவுகள் கோடி கோடி
அலைந்தோமே கலைந்தோமே
தொலைந்தோமே நாங்கள்
வழிதனை தேடி தேடி
யாரிடம் சொல்வது
யாரிடம் செல்வது
எங்களுக்கு ஏது கதி !
யாரிங்கு உண்மையாய் ?
யாரிங்கு வன்மையாய் ?
உன்னிடம் சரணாகதி !
சீராக்கு எம்வாழ்வை சீரடி பாபா !
சிறப்பாக்கு எம்வாழ்வை சீரடி பாபா !
ஆகாயம் நீதானே சீரடி பாபா !
ஆனந்த மழையாய் வா சீரடி பாபா !
Powered by Blogger.