காக்கும் கடவுள் சாயி
காக்கும் கடவுள் சாயி!
கருணையின் வடிவே சாயி!
பூக்கும் மரங்களில் சாயி!
பழுத்த கனியிலும் சாயி!
மண்ணுள் ஓடிடும் வேரில் சாயி!
நிலத்தடி நீரில் சாயி!
பொங்கும் வெள்ளப் பிரவாகமாய் சாயி!
பேரருள் தருவது சாயி!
எங்கும் சாயி! எதிலும் சாயி!
உயிர்கள் அனைத்திலும் சாயி
அன்பு ஒன்றே சாயி
அகிலம் எல்லாம் சாயி
மனத்தில் நினைத்தால் சாயி!
அதுவே இன்பம் சாயி!
 
பூஜையும் ஆர்த்தியும் வேண்டாம்
அன்பும் பக்தியும் போதும்
அவனை நினைத்திரு மனமே
கேடு அண்டாது உனையே
நடப்பவை எல்லாம் அவன் சித்தம்
நடக்கப் போவதும் அவன் எண்ணம்
இடைவிடாது உனைத் துதிக்க
இயலாதென்பதை இயல்பாக்குவாய்

காக்கும் கடவுள் சாயி!
கருணையின் வடிவே சாயி!

நன்றி முகநூல் பதிவிட்ட சாயி அன்பருக்கு
முதல் இரு வரிகளைத் தந்தவர் சகோதரி கீதா அசோக்
கவிதை ஆக்கம் ராதா மரியரத்னம்
Powered by Blogger.