Wednesday, December 7, 2016

ஜெய ஜெய நாதா சீரடி பாபா

ஜெய ஜெய நாதா சீரடி பாபா
தினம் தினம் வணங்கி போற்றிடுவோம்
ஹர ஹர நாதா ஆனந்த ரூபா
அனுதினம் ஆரத்தி எடுத்திடுவோம்        (ஜெய)
கார் இருள் அகற்றும் கதிரவன் உனக்கு
காலையில் ஆரத்தி எடுத்திடுவோம்
பாவங்கள் அகன்று பக்தியில் திளைக்க
பகல் வேளை ஆரத்தி எடுத்திடுவோம்
மங்களம் அளிக்கும் சந்திரன் உனக்கு
மாலையில் ஆரத்தி செய்திடுவோம்
இன்பத்தை கொடுத்திடும் இறைவனே
இரவில் ஆரத்தி சுற்றிடுவோம்
அகிலத்தை காக்கும் ஆண்டவன் உனக்கு
அனுதினம் ஆரத்தி பாடிவோம்
அகந்தையை அழிக்கும் ஆனந்தன் உன்னை
ஆரத்தியால் மனம் குளிர வைப்போம்
சஞ்சலம் போக்கும் சத்குரு உனக்கு
சமயத்தில் ஆரத்தி எடுத்திடுவோம்
நம்பிடும் மனங்களில் நல் அருள் புரியும்
நாயகன் உன்னை வணங்கிடுவோம்          (சஞ்சலம்)
அனுதினம் எம்மை அன்புடன் ஈர்க்கும்
ஆண்டவன் உன்னில் பணிந்திடுவோம்
சீலமாய் வாழ சீர் அருள் செய்யும்
சீரடி நாதனில் சரணடைவோம்
வையகம் எங்கும் உன் புகழ் ஓலிக்க
வழக்கமாய் ஆரத்தி பாடிடுவோம்
சகலரும் போற்றும் சாய்ராம் உனக்கு
சால்வைகள் போற்றி வேண்டிடுவோம்
தினம் தினம் எங்களை காத்திடும் உமக்கு
அன்புடன் ஆரத்தி பாடிடுவோம்
அகத்தினில் ஓளிரும் ஆதவன் உன்னை
ஆரத்தியால் தினம் மகிழவைப்போம்
ஆரத்தி ஆரத்தி பாபா ஆரத்தி ஆரத்தி பாபா   (ஜெய)

நன்றி முகநூலில் பதிவு செய்திருந்த சாயி அன்பருக்கு

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...