மதுரமே சாயி
மதுரமே சாயி உன் நாமம்  மங்கள பாதம் சரணம்
உனை மறவா நெஞ்சம் வேண்டும் மதுரமே சாயி உன் நாமம்
மரகதமணியே சீரடி ஒலியே பக்தரை காத்திடும் பாபா
மனமகிழ் தரிசனம் தருவாய் சாயி ஆதி அந்தமில்லா ஜோதி
கருணையின் பூரண மோகன சாயி ஆகம பொருளும் நீயே
                                                                                                                                   (மதுரமே)
மலர் கரங்களில் அபயம் தருவாய் மலர் கண்ணனே சாயி
மோன நிலையிலே மெளனமே மொழியாய்
அருளை பொழிந்திடுவாய்
நாமம் சொல்வேன் சாயி நாதனே
உன்வழி அதுவே வேதம்                                  (மதுரமே)
உலா வரும் உன் திருவருள் பாதம்
நிலா ஒளியென மின்னும் திருநீர் அளித்த திருநீல கண்டா
திருமுகம் காட்டோயோ சாயி காலமெல்லாம் 
உன் கருணையை எண்ணி கரைந்திடுமே என் கண்கள்      (மதுரமே)

Powered by Blogger.