ஓம் சாய்ராம்!பச்சை ஆடை அணிந்தார்
பாபா பசுமையோடு இருந்தார்
இச்சையெல்லாம் தவிர்ப்பார்
பாபா இன்னல் களைந்திடுவார்
பிச்சை ஏந்தியே பாபா எம்
பிழை பொறுக்க வந்தார்
மிச்சமானதெல்லாம் பாபா
ஒரு பிடி சாம்பல்
இச்சகத்தில் உள்ளவற்றில்
ஆசையேதும் இன்றியே
துச்சமென நினைப்போம் பாபா
உம் அருளை மட்டும்
நாடி வந்தோம்
மச்ச அவதாரம் எடுத்த
கண்ணனின் சாயலோ பாபா
எச்சமயத்தவரும் வணங்கும்
இஷ்ட தெய்வம் பாபா
அச்சமில்லை எமக்கே
உந்தன் தாள் பணிந்த பின்பேBottom of Form

Powered by Blogger.