இப்படி சத்சரித்திரம் கூறுகிறது.
நீங்கள் பாபாவை
தரிசிக்க வேண்டும் என்றால், அவர்
மீது நம்பிக்கை உள்ளவர்களாக மாறுங்கள். அவருடைய பாதங்களைப் பிடித்துக் கொண்டு,
பாபா என்னை மன்னித்து
விடுங்கள். இனி உங்கள் வழி காட்டுதலை மீறமாட்டேன் எனக் கூறுங்கள். எந்த நேரத்திலும்
என்னை விட்டு நீங்காமல் இருங்கள்.. இந்த மனமே உங்கள் சீரடியாக இருக்கட்டும் என
வேண்டுங்கள்.
எப்போதும் சாயி நாம
ஜபம் செய்து, மனதை
சக்தி மிகுந்த ஷேத்திரமாக மாற்றுங்கள். அவரைப்பற்றிய நினைவும்,
அவர் நாம தியானமும்
உங்கள் மனதில் மீண்டும் அவரை உயிர் பிழைக்க வைக்கும். இதை உடனடியாகச்
செய்யுங்கள். எதிலும்
நம்பிக்கை வைத்து வாழ்க்கையை ஆரம்பியுங்கள். ஒருவர் மீது ஒருவர் அன்பு
காட்டுங்கள். இதை பாபா அதிகமாக விரும்பினார். யாரையும் குறை சொல்வதை அவர்
பொறுத்துக்கொள்ளவில்லை. குறை கூறுவோருக்கும், புறம் பேசுவோருக்கும் அவர்
தண்டனைத்தரவும் தயங்கியதில்லை.
தம்பதியருக்குள்ளோ,
பெற்றோர் பிள்ளைகளுக்கு
உள்ளோ, மாமியார் மருமகளுக்கு
உள்ளோ, மற்றவர்களுடனோ பிணக்குகளை
வளர்த்துக் கொள்ளாமல், கசப்புகளை
நீக்கும் வழிகளை ஆலோசித்து செயல்படுத்துங்கள். அனைவரையும் நேசித்து
அன்பு காட்டுங்கள்.
அதற்கு முன்னதாக,
ஒருவர் செய்த தவறை
மன்னித்து விடுங்கள். நட்புக்கு நீள்வது உங்கள் கரமாக இருக்கட்டும். இப்படிச்
செய்து, பொறுமையோடு அவருக்குக்காத்திருந்தால்
வாழ்க்கையில் இன்பம் பெருகும். அவரது தரிசனம் தடையின்றி கிடைக்கும். சாயியின்
திருவடிகளைத் தொழுவோம்
ஜெய் சாய்ராம்!
No comments:
Post a Comment