நானிருக்க பயமேன்அன்பு குழந்தையே! 
உன் தந்தை நானிருக்க கலக்கம் ஏன்? என் குழந்தைகள் கலங்க மாட்டார்கள், எது வந்தாலும் எதிர்கொள்வார்கள், வருவது எல்லாம் என்னாலோ, அல்லது என்னைத்தாண்டியோ மட்டும்தான் வரும் என்பதை தீர்க்கமாக அறிந்திருப்பார்கள். நல்லதோ கெட்டதோ எல்லாம் நன்மைக்குத்தான் என்பதை தீர்க்கமாக உணர், முடிந்தால் தாங்கிக்கொள் இல்லையேல் என் பாதங்களில் சுமத்திவிடு, எதுவும் நிரந்தரம் இல்லை. எல்லாம் ஒரு நாள் மாறும், நான் மட்டும் உன்னை விட்டு மாறமாட்டேன், என்னிடம் தஞ்சம் புகுந்தவர்கள் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அவர்களை தாங்கி நிற்ப்பேன். "நானிருக்க பயமேன்" இது வெறும் வார்த்தையல்ல, என் சத்திய வாக்கு
Powered by Blogger.