Saturday, July 12, 2014

நோய் தீர்க்கும் பாபா கோயில்!

meekkudi



திருச்சி மேக்குடி கிராமத்தில் உள்ள பாபா கோயிலின் நிர்வாகி காந்திமதி. திருச்சியின் பிரபல வக்கீலும் தொழிற் சங்கவாதியுமான மீனாட்சிசுந்தரத்தின் மனைவி இவர்.
‘‘1980களில் மகாராஷ்டிராவில் இருந்த எங்க மகளையும் மருமகனையும் பார்க்கப் போன போதுதான் ஷீரடி கோயிலுக்குப் போனோம். என்னவோ ஒரு ஈர்ப்பு... அங்கே அடிக்கடி போகணும்னு தோணிச்சு. அங்கே நம்ம தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவநேச பாபாவை ஒரு முறை தரிசித்த போது, அவர்தான் பூஜை செய்யப்பட்ட பாபா படம் ஒன்றைக் கொடுத்தார். அதைத் தண்ணீர் பஞ்சமில்லாத ஒரு கிராமத்தில் வைத்து வணங்கச் சொன்னார்.



அப்படிப்பட்ட இடத்தைத் தேட முடியாமல், ஆரம்பத்தில் அதை வீட்டில்தான் வைத்து வணங்கினோம். நண்பர் ஒருவர் தனக்கு மேக்குடி கிராமத்தில் நிலம் இருப்பதாகச் சொல்லி, அங்கேயே கோயில் கட்டலாம் என்றார். முதல் கட்ட வேலைகளை ஆரம்பிச்சோம். அவ்வளவுதான்... மக்களே விரும்பி வந்து உதவிகள் செஞ்சு நினைச்சதை விடப் பெரிய கோயிலா இதைக் கட்டிக் கொடுத்துட்டாங்க. எல்லாம் பாபாவின் செயல்’’ என்கிறார் காந்திமதி.



கீழ்த்தளம், மேல்தளம் என தாராளமாகக் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோயிலில் பிரார்த்தித்தால், பல்வேறு நோய்களும் நீங்குவதாகச் சொல்கிறார்கள் பக்தர்கள். காலை 5.30 முதல் மதியம் 2.30 மணி வரையும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்இந்தக் கோயில், திருச்சியிலிருந்து மதுரை போகும் வழியில் 18 கி.மீ தொலைவில் விராலிமலைக்கு முன்பு அமைந்துள்ளது. ஆலயத் தொடர்புக்கு: 0431-2740808, 94439 79917.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...