Sunday, July 13, 2014

வந்தது நானே!

12



மகல்சாபதி (பாபாவின் நெருங்கிய பக்தர்) தமது பல்லக்குடன் ஜேஜுரிக்கு பயணம் மேற்கொண்டார். அங்கே பிளேக் நோய் பரவியிருந்தது. மகல்சாபதியும் அவருடன் வந்த சக பயணிகளும் பல்லக்கை கீழே வைத்தனர்; மிக்க மனவுளைச்சலுடன் மகல்சாபதி பல்லக்கின் மீது சாய்ந்தவாறு அமர்ந்திருந்தார். அவருக்குப் பின் புறம் யாரோ இருப்பது போல் அவருக்கு தோன்றியது. பின்பக்கமாக அவர் திரும்பிய போது, அங்கே பாபாவைக் கண்டார்; ஆனால் அவர் உடனே மறைந்து விட்டார். சகாக்களிடம் பாபா அவர்களுடன் இருப்பதாக அவர் கூறினார். அவர்கள் எல்லோருக்கும் துணிவு வந்தது; மேலும் நான்கு தினங்கள் அங்கேயே தங்கினார்கள். ஒருவரையும் பிளேக் நோய் பற்றவில்லை. எல்லோரும் நலமாக திரும்பிச் சென்றனர்.அவர்கள் திரும்பி வந்தபோது,



பாபா: பகத், உமக்கு நல்லதோர் யாத்திரை, நீர் பல்லக்கின் மீது சாய்ந்தவாறு உட்கார்ந்திருந்தீர். அந்த சமயம், நான் அங்கே வந்திருந்தேன்.



இவ்விதமாக தமது அதிசயத்தக்க சக்திகளால் தாம் வாஸ்தவமாகவே அன்று ஜேஜூரியில் இருந்ததை உறுதிப்படுத்தி மகல்சாபதி, பாபாவைக் கண்டது மனப்பிராந்தியோ, மாயையோ அல்ல என்பதையும் தெளிவாக்கினார்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...