மதுரை டி.பி.கே மெயின் ரோட்டை ஒட்டிய ஆண்டாள்புரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஷீரடி சாயிபாபா திருக்கோயிலின் வரலாறு, இந்திய சுதந்திரத்துக்கு முன்பிருந்தே ஆரம்பிக்கிறது. 1942களில் ராஜமன்னார், சூர்யநாராயணன் என்ற இரு நண்பர்கள் மதுரையில் கட்டிய சாயி கோயில், அவர்களின் இறப்புக்குப் பின் பொலிவிழந்து விட்டது. பல வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் அதே ராஜமன்னார் குடும்ப உறுப்பினரான ஸீனத் என்ற பெண் தலைமையில் ஒரு டிரஸ்ட் ஆரம்பிக்கப்பட்டு, 2006ல் மதுரை ஆண்டாள்புரத்தில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது இன்றைய கோயில்.
விசேஷ தினமான வியாழக்கிழமைகளில் மாத்திரம் 20 ஆயிரம் பக்தர்கள் குவிகிறார்கள் இங்கே. ‘‘இங்குள்ள பாபா கேட்டதைக் கொடுப்பார். எதையும் குணமாக்குவார்’’ என்கிறார்கள் அவர்கள். ‘‘இந்தக் கோயிலில் ஆன்மிகத்தோடு ஏழைகளுக்காக மருத்துவ உதவி, கல்வி உதவி, மற்றும் முதியோர் சேவைகளும் செய்யப்படுகிறது’’ என்கிறார் கோயில் டிரஸ்ட் செயலாளரான டாக்டர் பிரபு.
காலை 6 முதல் 1 மணி வரையிலும் மாலை 5 முதல் 9 மணி வரையிலும் பக்தர்களுக்காகத் திறந்திருக்கும் இக் கோயிலில், தினமும் பிரசாதமும் வியாழன் தோறும் அன்னதானமும் வழங்கப்படுகிறது.
ஆலயத் தொடர்புக்கு: 9842150201
Tuesday, July 8, 2014
தமிழகத்தில் கேட்டதைக் கொடுக்கும் சாயி!
Subscribe to:
Post Comments (Atom)
குரு நம்பிக்கை
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...
-
1. ஓம் சாய் நாதா போற்றி ஓம் ! 2. ஓம் தக்ஷிணாமூர்த்தி தத்தா அவதாரா போற்றி ஓம் ! 3. ஓம் சாகர சாய் போற்றி ஓம் ! 4. ஓம் பண்டரிபுர விட்ட...
-
காகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.? காகம் பற்றிய உண்மைகளும் ஆன்மீக தகவல்களும்.! 1.அதிகாலையில் எழுந்து கரைதல். 2.உணவி...
-
நிச்சயமாக உனக்கு குழந்தை பாக்கியம் உண்டு! ” காலப்போக்கில் பாபாவினுடைய திருவாய் மொழி உண்மையாயிற்று...... அவருடைய ஆசிர்வாதம் பலனளித...
No comments:
Post a Comment