Thursday, July 3, 2014

திருக்கோவிலூர் அருகே சாயிபாபா ஆலயம்!

sairam



என் பெயர் விக்னேஸ்வரன். சொந்தமாக ஆட்டோ ஓட்டுகிறேன். எனக்கு சாயி பாபா மீது துளியளவு கூட நம்பிக்கை இல்லாமல் இருந்தது. பின் என் வாழ்வில் பாபா வந்தது மிகவும் சுவாரஸ்யமானது.



தற்போது எனக்கு வயது 29. என் மனைவி உமா.  மணமாகி நான்கு ஆண்டுகளாகி குழந்தையில்லாமல் இருந்தது. இதனால் நாங்கள் பட்ட துயரங்கள் அதிகம்.



என் மனைவியின் தோழி ஒருவர் பாபாவின் அற்புதங்களையும் விரதங்களையும் கூற, என் மனைவி பாபாவுக்கு வியாழன் தோறும் விரதம் இருந்தாள். அந்த நிலையிலும் எனக்கு பாபா மீது நம்பிக்கை தோன்றவில்லை.



நான்கு ஆண்டுகளாக அருப்புக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களில் குழந்தைப் பேறுக்காக டாக்டர்களை பார்த்தோம். மருந்து மாத்திரைகள் தந்தார்களே தவிர, வேறு பலன் கிடைக்கவில்லை. போகாத கோயில்களும் கிடையாது எனலாம்.



எனது மனைவி உடலை வருத்தி விரதம் இருப்பது முட்டாள் தனமானது என எண்ணினேன். எனது மனைவியின் விரதத்தில் ஒரு மிகப்பெரிய அபூர்வ நிகழ்வு ஒன்று நடந்தது.



என்ன ஆச்சர்யம்- இரண்டாவது வியாழக்கிழமை என் மனைவி கருத்தரித்தாள். என்னால் இந்த ஆச்சரியத்தைத்தாங்க முடியவில்லை. பாபாவுக்கு இப்படியும் ஒரு சக்தியிருக்கிறதா என வியந்தேன். குழந்தை பிறந்தால் பாபாவின் பெயரையே வைப்பதாக முடிவு செய்தேன்.



அழகான பெண் குழந்தை பிறந்தது. பெயர் சாயி _. என் குடும்பத்தாரும் பாபாவின் அற்புத சக்தியை நினைத்து அதிசயப்பட்டு, அவரது பக்தர்கள் ஆனார்கள். அன்றிலிருந்து பாபாவுக்கு அடிமையானேன். பாபா மீதான பக்தி என் இரத்தத்தில் பாய்ந்திருப்பது போன்று உணர்ந்தேன்.



இதனால் பாபாவின் அற்புதங்களை சேகரிக்க ஆரம்பித்தேன், அவரைப் பற்றி சொல்லவும் ஆரம்பித்தேன். என்னுடன் ஆட்டோ ஓட்டும் ராஜா என்ற நண்பருக்கு மூன்று ஆண்டுகளாகக் குழந்தையில்லை என்பதை என்னுடன் கூறி வருத்தப்பட்டான்.



உடனடியாக, ”பாபா இருக்க பயம் ஏன்? கவலையை விடு. அவரை வேண்டிக்கொள்.. நிச்சயம் உனக்குக் குழந்தை பிறக்கும். உனக்காக விரதமிருக்கிறேன். இன்றிலிருந்து நான்காவது வியாழக்கிழமை நீயே என்னிடம் வந்து ஒரு நல்ல செய்தியைச் சொல்வாய்”  எனக் கூறினேன்.



ஒவ்வொரு வியாழன் தோறும் எனது நண்பனுக்காக விரதமிருந்தேன். பாபா எனது விரதத்தை அங்கீகரியுங்கள் என வேண்டினேன். அவர் வரம் தந்துவிட்டார். மூன்றாவது வியாழக்கிழமையே, என் மனைவி கருத்தரித்து இருக்கிறாள் என்று வந்து சொன்னார்.



பாபா என் வாக்கைக் காப்பாற்றினார் என்பதைவிட, என் விரதத்தை ஏற்று அவனுக்கு வரம் தந்தார் என்பதே உண்மை. இதுபோன்று நிறைய அற்புதங்களை பாபா நிகழ்த்தியிருக்கிறார். இனியும் பகிர்ந்துகொள்வேன்.



ஜி விக்னேஸ்வரன்

 

 

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...