Tuesday, July 1, 2014

தென்னிந்தியாவின் ஷீரடி!

Mylapore-Shirdi Sai Baba Temple-8

சென்னை மயிலாப்பூரில் திருமயிலை ரயில் நிலையத்துக்கு பின்புறம் அமைந்துள்ள சாயிபாபா ஆலயத்தை, ‘தென்னிந்தியாவின் ஷீரடி’ என்கிறார்கள் சாய்பக்தர்கள். சாயிபாபாவின் அதி தீவிர பக்தரான பூஜ்ய ஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி 1941ம்ஆண்டு நிறுவினார். ஷீரடிபாபாவின் புகழை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர்களில் இவர் முக்கியமானவர்.

மயிலாப்பூர் ஆலயத்தின் சிறப்பம்சம்,

பக்தர்கள் எவரும் வெண் பளிங்குச் சிலையாக வீற்றிருக்கும் பாபாவின் காலைத் தொட்டு வணங்கலாம். பாபா சன்னதிக்குப் பின்புறத்திலேயே நரசிம்மசுவாமியின் சமாதியில் அவரது அஸ்தியும் வைக்கப்பட்டுள்ளது. அகில இந்திய சாயி சமாஜத்தால் நிர்வகிக்கப்படும் இந்த ஆலயத்தின் அன்னதானம் மிகவும் பிரபலமானது. தினமும் மதிய வேளையில் மூவாயிரம் பேருக்கு மேல்அதில்கலந்துகொள்கிறார்கள்.  அதிகாலை 5 முதல்மதியம் 1 மணிவரையிலும்மாலை 4 மணிமுதல்இரவு 9 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கிறது.

ஆலயத்தொடர்புக்கு: 044 – 24640784

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...