கர்ம வினை எப்படி தோன்றுகிறது? எல்லாம் முந்தைய வினைப்படி நடக்கிறது என்றால், இந்த ஜன்மத்திற்கு ஏதும் நடக்காதா?
எண்ணம். அதன் வெளிப்பாடான சொல், செயல் காரணமாக கர்ம வினை தோன்றுகிறது. வேலைக்கு சம்பளம், ஓய்வின் போது ஓய்வூதியம் போன்றதுதான் கர்மப் பலன். வினையின்போது ஒரு பலனும், இந்த பிறவியைத் தவிர்த்து மறு பிறவிக்கு மாறும்போது அடுத்த பலனும் வரும்.
எனது இந்த ஜென்மத்துப் பலன்களுக்கு பரிசாக அடுத்த ஜென்மத்தில் பறவை அல்லது விலங்குப்பிறவி அமைந்தால் அதிலும் இந்த கர்ம வினை வேலை செய்யுமா? விலங்கு நிலையிலிருந்து மனிதப்பிறவி எப்படி வாய்க்கும்?
கண்டிப்பாக, விலங்குப் பிறவியின் போதும் இந்த கர்மவினை செயலாற்றும். காக்கை தனக்குக் கிடைத்த உணவை பகிர்ந்து உண்ணும். இப்படி பறவைகளும், விலங்குகளும் நடக்கின்றன. தன் தேவைக்குப் போக மீதியை பறவையோ விலங்கோ சேர்த்து வைக்காது. தான் பாவம் செய்கிறோம் என்ற உணர்வில்லாமல், உயிர் பிழைக்க உணவு என்ற இயல்பில் அவை செயல்படும். சில விலங்குகள் பிறர் வாழ தன் உயிரைத்தியாகம் செய்யும். இவையெல்லாம் புண்ணியக்கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
சில விலங்குகளோ, பறவைகளோ, எறும்பு, ஈ போன்றவையோ, கோயில் அல்லது மகான்களின் சங்கமம் செயல்படுகிற இடங்களுக்கு செல்வதும், அங்கே உயிர் துறப்பது போன்றவையும் நடக்கும்.
இந்தப் புண்ணிய பலன்கள் அவைகளின் கணக்கில் சேரும்.
வேர் வலிக்க நீரை உறிஞ்சி, இலையாக, காயாக, கனியாகத் தந்து, கல்லடியும், காலடியும் பட்டு, கடைசியில் வெட்டுப்படவும் நேருகிற மரம், முந்தைய பாவம் கழிந்து,மேல் நிலைக்கு வரும்.
மாங்காய் விதை போட்டால் மாஞ்செடி முளைக்கும், மஞ்சள் விதை போட்டால் மஞ்சள்தான் முளைக்கும். மாற்றி முளைக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு செய்திதான். அப்படியிருக்க, மனிதன் மட்டும் எப்படி மற்ற விலங்குகளாகவும், மற்ற உயிரினங்கள் மானுட ஜென்மமாகவும் பிறக்கமுடியும்?
இது சில கிறித்தவர்கள் சொல்கிற வாதம் போன்றிருக்கிறது. அடிப்படை தெரியாமல் இப்படி பேசுவார்கள். நன்றாக விளங்கிக்கொள்.
உடல் – உயிர் - ஆன்மா இந்த மூன்றும் சேர்ந்தது வாழ்வு. உடலை இயக்கி ஆன்மாவை தக்க வைக்கிற சக்தியே உயிர். இந்த இரண்டையும் மூடிப்பாதுகாக்கிற பாண்டம் தான் உடம்பு.
மனித உடம்பில் போடப்படுகிற உடல் உயிர் மனிதனாக மாறுகிறது, மாங்காய்க்குள் போட்டால் மாஞ்செடியாக மாறுகிறது. போடப்படுகிற பொருள்தான் விக்ஷயமே தவிர, எதில் போடப்படுகிறது என்பது விக்ஷயமல்ல.
உடம்பு இந்த உலகத்திலேயே குப்பையாகப் போடப்படும். மண்ணில் மறுசுழற்சியாக மாறும் என நினைக்காதீர்கள். மண்ணாகப் போகும். உயிர் இரத்தத்தில் இருக்கிறது என்பார்கள். அந்த உயிரும் சக்தியிழந்து விரையமாகப் போகும். எஞ்சிய ஆன்மா இறைவனிடம் போகும். அது, தனது செயலுக்கும், இறைவனின் கருத்துக்கும் ஏற்ப, வேறு வித பாண்டங்களில் ஏதேனும் ஒன்றில் லயமாகும்.
No comments:
Post a Comment