மதுரை வைகை ஆற்றின் மேற்கே திருவேடகத்தில் எழுந்திருக்கும் ஷீரடி சாயி கோயில் கட்டப்பட்டதே ஓர் அதிசயக் கதை என்கிறார் கோயில் நிர்வாகியான வாசுதேவி. ‘‘நாங்க சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம்தான். அரசு வேலையில் இருந்த எனக்கு அடிக்கடி ஒரு கனவு வந்தது. அதில், கிழிந்த சட்டையும் திருவோடுமாக யாசகர் தோற்றத்தில் ஒரு பெரியவர் வந்தார். ‘எனக்கு ஒரு வீடு வேண்டும் நாம் ஐக்கியமாக வேண்டும்’ என்று அவர் சொல்ல, நான் பயந்துவிட்டேன். கனவில் வருபவர்களிடம் பணம் கேட்டால் மீண்டும் வரமாட்டார்கள் என்று நண்பர்கள் சொன்னார்கள். அதனால், ஒரு முறை அந்தப் பெரியவரிடம் பணம் கேட்டேன்.
‘முப்பது நாளில் ஒரு மனிதர் உன்னைத் தேடி வந்து நிலம் கொடுப்பார், மேலும் முப்பது நாளில் கட்டிடம் கட்ட உதவிகள் அனைத்தும் கிடைக்கும்’ என்றார் அவர்.
அவர் சொன்னது போலவே மிகமிகக் குறைந்த விலைக்கு நிலம் ஒன்று எங்கள் வசம் வந்தது. அப்போதுதான் கனவில் வந்தது பாபா என்பதை உணர்ந்தேன். நிலம் வாங்கிய பிறகு, சுற்று வட்டார மக்கள் தங்களால் ஆன உதவிகளைச் செய்ய, இந்த அளவு கோயிலாக அது வளர்ந்துவிட்டது’’ என்கிறார் வாசுதேவி. 2008ல் துவங்கி, வெறும் எட்டே மாதங்களில் கட்டப்பட்ட இந்தக் கோயில், 2009ல் கும்பாபிஷேகத்துடன் திறக்கப்பட்டது. பணத்துக்கு பணம், ஞானத்துக்கு ஞானம் என்று கேட்டதைக் கொடுக்கும் இந்த பாபா கோயில், காலை 5 முதல் மாலை 8 மணிவரை திறந்திருக்கும்.
ஆலயத் தொடர்புக்கு:98421 84942, 98947 41109
No comments:
Post a Comment