உங்கள் உச்சிமுதல் உள்ளங்கால் வரை கவசமாய் நான் இருக்கிறேன்.உங்கள் தொழில் எதுவானாலும் உங்கள் வேலையை என்னுடையதாக மாற்றி விடுகிறேன். பார்வையும் பார்க்கப்படும் பொருளும் நானாக இருக்கிறேன். இவ்வளவாக நான் உழைத்துக் கொண்டிருப்பதால் பயம் ஏன்? பயமற்று இருங்கள்! ஏக்கம் ஏன்? எனக்காக ஏங்குங்கள்.பரபரப்பு ஏன்? என் மீதே மிக்க ஆவல் கொள்ளுங்கள். கவலை ஏன்? எனக்காகவே கவலைப்படுங்கள்.
பரஸ்பர அனுராகத்திலேயே நான் இருக்கிறேன்.ஆத்மார்த்த அன்பு எங்குண்டோ அங்கு நான் இருக்கிறேன்.விசாலமான சிருஷ்டியில் நம்பிக்கையை உதவியாகக் கொண்டு என்னுள் பிரவேசியுங்கள்.
ஸ்ரீ சாயி திருவாய் மொழி.
No comments:
Post a Comment